பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை இரண்டாக உடைத்துள்ளது. இருவரும் நான்தான் தலைவர் எனக் கூறி நிர்வாகிகளை நீக்கியும் நியமிக்கும் வருகிறார்கள். சமீபத்தில் ராமதாசால் கட்சியின் இணை பொது செயலாளராக நியமிக்கப்பட்ட சேலம் எம்எல்ஏ அருளின் பாமக சட்டமன்ற கொரடாவை பறிக்க வேண்டும் என்று சபாநாயகர் இடம் அன்புமணி ஆதரவு மூன்று எம்எல்ஏக்கள் மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டார். நேற்று முன்தினம் ராமதாஸ் திண்டிவனத்தில் பாமக செயற்குழுவையும், அன்புமணி பனையூரில் பாமக நிர்வாக குழு கூட்டத்தையும் தனித்தனியாக கூட்டினர்.
இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இப்படி பாமகவின் தலைவர் பதவி தொடர்பாக இருவரும் தற்போது தேர்தல் ஆணையத்தை நாடி இருப்பதால் மாம்பழ சின்னம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அன்புமணியின் தலைவர் பதவி மே மாதத்துடன் நிறைவடைந்து விட்டதாக ராமதாஸ் முறையீடு செய்துள்ளார். அதே சமயம் அன்புமணி தரப்பினர் 2026 ஜூன் மாதம் வரை தலைவர் பதவி உள்ளதாக மல்லுக்கு நிற்கின்றனர். ஒருவேளை இந்த சண்டை மேலும் வலுவடைந்து கட்சி இரண்டாக உடைந்தால் பாமகவின் மாம்பழ சின்னம் முடக்கப்படும் வாய்ப்புள்ளது என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தொகுதிப் பங்கீடு தொடர்பான சிறுசிறு சலசலப்புகளைத் தள்ளிவைத்துவிட்டு, கொள்கை ரீதியான பெரும் போராட்டத்திற்காக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீண்டும்…
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…