கொலைவெறியுடன் தாக்குதல்…! துப்பாக்கி சூடு நடத்தியவரை துணிச்சலுடன் பிடித்த நபர்… பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் நேற்று  ஒரு யூத சமூக நிகழ்ச்சி நடைபெற்ற போது, அங்கு இருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கர சம்பவம் ஆஸ்திரேலியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்து, விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் ஒரு தந்தை மற்றும் மகன் என்று போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 50 வயதுடைய சஜித் அக்ரம் என்பவர், சம்பவ இடத்திலேயே போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார்.

அவரது மகன், 24 வயது நவீத் அக்ரம், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இருவரும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலின்போது, துணிச்சலுடன் செயல்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்ற அகமத் அல் அகமத் என்பவரின் வீரம் உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

சவுத்ர்லேண்டில் பழக்கடை வைத்திருக்கும் 43 வயதான இரு குழந்தைகளின் தந்தையான அகமத், வெறுங்கைகளால் தாக்குதல் நடத்தியவரை எதிர்கொண்டார். அவரது இந்தச் செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அகமதுக்கு இரண்டு இடங்களில் குண்டுக் காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவர் ஒரு உண்மையான ஹீரோ என்றும் அவரது உறவினர் முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

3 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago