ஜார்கண்ட் மாநிலம் பாபுதியைச் சேர்ந்த இளைஞனும், நில வியாபாரியின் மகனுமான சோனு, கடந்த மூன்று ஆண்டுகளாக பெலாடண்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் காதல் உறவில் இருந்தார். இருவரும் நீண்ட காலமாக சந்தித்துப் பேசி வந்தனர். இதற்கிடையில், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் பொகாரோவைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் அவளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். திருமண ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. ஆனால் சோனு இதை அறிந்ததும் பொகாரோவில் இருக்கும் மணமகனை அழைத்து சோனு எல்லாவற்றையும் கூறியுள்ளார். அந்தப் பெண்ணை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வருவதாகவும், திருமணம் நடக்கவில்லை என்றால் தற்கொலை கூட செய்து கொள்வேன் என்றும் அவர் அவரிடம் கூறினார். இதைக் கேட்டதும், மணமகனின் குடும்பத்தினர் உடனடியாக திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், சனிக்கிழமை மாலை, சோனு தனது காதலியை அழைத்து தன்னைச் சந்திக்கச் சொன்னார், ஆனால் வீட்டில் இருந்த சூழ்நிலையைக் காரணம் காட்டி அந்தப் பெண் மறுத்துவிட்டார். இருப்பினும் சோனு நேரில் அவளைச் சந்திக்க அவள் வீட்டிற்குச் சென்றார். அந்தப் பெண் உடனடியாகத் தன் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர் குடும்பத்தினர் சோனுவைப் பிடித்து கடுமையாக அடித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி காதலர்களுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளர்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…