“‘நீங்க மட்டும் எனக்கு இப்படித்தானே ஊட்டுறீங்க…!’ – தாயின் பழக்கத்தை அப்படியே திருப்பி… கொடுத்த குட்டி இளவரசி…! நெட்டிசென்களின் மனதை வென்ற வீடியோ…!!”

Spread the love

சமூக வலைதளங்களில் குழந்தவர்களின் வீடியோக்கள் எப்போதும் மக்களால் அதிகம் ரசிக்கப்படுபவை. அந்த வகையில், ஒரு சிறிய பெண் குழந்தை தனது தாய்க்கு தன் கைகளால் அன்போடு உணவு ஊட்டிவிடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடக்கத்தில் ஸ்பூனால் அந்த குழந்தை தாய்க்கு சாதம் ஊட்டுவதும், தாய் அதை சிரித்துக்கொண்டே சாப்பிடுவதும் பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாகவும் அழகாகவும் இருக்கிறது.

அடுத்த வாய் சாதத்தை குழந்தை ஊட்ட வரும்போது, தனது வாயில் ஏற்கனவே சாப்பாடு இருப்பதாகக் கூறி தாய் சிறிது நேரம் பொறுமையாக இருக்குமாறு கூறுகிறார். அதற்கு அந்த குழந்தை சற்றும் யோசிக்காமல், “நான் சாப்பிடும் போது மட்டும் நீங்கள் எனக்கு இப்படித்தானே அவசர அவசரமாக ஊட்டி விடுகிறீர்கள், இப்போது நீங்கள் சாப்பிடுங்கள்” என்று தன் மழலை மொழியில் பதிலடி கொடுக்கிறது. குழந்தையின் இந்த எதார்த்தமான பதிலைக் கேட்டு தாய் தன் சிரிப்பை அடக்க முடியாமல் உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்கிறார்.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் எந்தவொரு பதிவோ அல்லது நடிப்போ இல்லாமல், தாய்-மகள் இடையே நடக்கும் எதார்த்தமான அன்பான உரையாடல் நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளது. குழந்தைகள் தங்களைச் சுற்றி நடப்பதையும், பெற்றோரின் பழக்கவழக்கங்களையும் எவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து நினைவில் கொள்கிறார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணம் என்று இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

மாணவர்களுக்கு ஜாக்பாட்!… ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் ‘சூப்பர்’ சைக்கிள்… களம் இறங்கும் பிரபல நிறுவனம்… தமிழக அரசு செய்த மெகா மாற்றம்…!!

தமிழக அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நவீன சைக்கிள்களை வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ஹீரோ…

4 minutes ago

அதிர்ச்சி… பெண்களை வாடி, போடி என இஷ்டத்துக்கும் திட்டுகிறார்… தவெக நிர்வாகி சத்யா மீது சொந்தக் கட்சிப் பெண்கள் குற்றச்சாட்டு… அரசியலில் பரபரப்பு…!!

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சத்யா மீது அக்கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலர் பாலியல்…

14 minutes ago

என்னோட பேச மாட்டியா?… அதிகாலையில் வீடு புகுந்து இளம்பெண்ணை… மார்பில் கத்தியால் குத்திய கள்ளக்காதலன்… நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்…!

சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கஸ்தூரி, கணவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து…

29 minutes ago

ஐயோ… 13 வயது சிறுமியை தனியாக அழைத்து பாலியல் அத்துமீறல்… அழுதுகொண்டே தாயிடம் கூறிய மாணவி… நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள…

33 minutes ago

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

2 மணத்தியாலங்கள் ago