தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரசாரங்களுக்குப் பிறகு கடந்த சில நாட்களாகக் கொடைக்கானலில் தனது குடும்பத்துடன் ஓய்வு எடுத்து வந்தார். அங்கு தங்கியிருந்த ஐந்து நாட்களில் அவர் தினசரி காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இதற்கிடையில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் அப்பகுதியில் உள்ள பல்வேறு கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார்.
நேற்று தனது ஓய்வை முடித்துக்கொண்டு சென்னை திரும்புவதற்காகக் காரில் புறப்பட்டபோது, அங்கு காத்திருந்த சிறுமி ஒருவர் முதல்வரைப் பார்த்து, “தி.மு.க., தான் கெத்து; த.வெ.க., எல்லாம் வெத்து” என்று அரசியல் பஞ்ச் டயலாக் பேசினார். சிறுமியின் இந்தப் பேச்சைக் கேட்டு வியந்த முதல்வர் ஸ்டாலின், அதனை மிகவும் ரசித்தபடி அங்கிருந்து சிரித்துக் கொண்டே மதுரைக்குக் கிளம்பினார். இந்தப் புதுமையானச் சந்திப்பு அங்கிருந்தவர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (எம்.எல்.ஏக்கள்) விலைக்கு…
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…
கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…