Categories: சினிமா

தடுமாறிய நிலையில் கார் ஒட்டி சென்ற மறைந்த நடிகர் மாரிமுத்து… இறுதி திக் திக் நிமிடங்கள்… வெளியான CCTV காட்சிகள்…

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை தான் எதிர்நீச்சல் சீரியல். கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்துபவர்களுக்கு மத்தியில் பெண்கள் போராடுவது தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் வில்லனாக மிரட்டி வருபவர் தான் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து.

இவர் சீரியலில் நடிக்கும் கதாநாயகி மற்றும் கதாநாயகனை காட்டிலும் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். சீரியலில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கு முன்பு இவர் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தார்.

இந்த சீரியலில் அவர் தனது வில்லத்தனமான நடிப்பை எதார்த்தமாக காட்டி வந்தார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கதாகும். இவர் தனது சொந்த மாமன் மகளான பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

நேற்று காலை அவர் மாரடைப்பால் காலமானார்.  சீரியல் டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது மாரிமுத்து மூச்சுத் திணறல் ஏற்படவே அங்கிருந்து கிளம்பி வெளியே வந்துள்ளார்.  தனது காரை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடல் சென்றும் உள்ளார்.  ஆனால் ஹாஸ்பிடல் சென்ற மறுகணமே அவரது மாரடைப்பின் காரணமாக அவரது உயிர் பிரிந்தது. தற்பொழுது நடிகர் மாரிமுத்து டப்பிங் ஸ்டுடியோவிலிருந்து வெளியே வந்தது முதல் அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பியது வரையிலான திக் திக் நிமிடங்கள் குறித்த சி சி டிவி வீடியோ இணையாயத்தில் வெளியாகியுள்ளது.. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

5 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

5 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

6 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

6 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

6 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

6 மணத்தியாலங்கள் ago