நடிகை ஜெய வாகினி (இயற்பெயர் பத்மா விஸ்வரி) 1972-ல் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்து, தன் கடின உழைப்பால் திரைத்துறையில் தடம் பதித்தவர். ஆரம்பத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், பின்னர் சின்னத்திரை தொடர்கள் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். குறிப்பாக, தெலுங்குத் தொடர்களில் இவர் நடித்த ‘வாசவி’, ‘பத்மா’ போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தன. சின்னத்திரையில் கிடைத்த இந்த மாபெரும் வரவேற்பு இவருக்குத் தமிழ்த் திரையுலகிலும் வாய்ப்புகளைப் பெற்றுத்தந்தது. அந்த வகையில், தமிழில் மறைந்த இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான புகழ்பெற்ற ‘அமைதிப்படை’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அமைதிப்படை படத்திற்குப் பிறகு இவருக்குத் தமிழில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து கலைத்துறையில் இயங்கி வந்தார். இவர் கடைசியாக 2019-ஆம் ஆண்டு வெளியான ‘ரகுபதி வெங்கையா நாயுடு’ என்ற வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு, எதிர்பாராத விதமாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நீண்ட காலமாக அதற்கான சிகிச்சைப் பெற்று வந்தார். திரையில் பலரை மகிழ்வித்த இவருக்கு, நிஜ வாழ்க்கையின் கடைசி காலத்தில் முறையான வருமானமோ அல்லது இவரை அரவணைத்துக் கவனித்துக் கொள்ளும் உறவுகளோ இல்லாததால், சிகிச்சைக்குக் கூட பணமில்லாமல் பெரும் வேதனையையும் வறுமையையும் அனுபவிக்க நேர்ந்தது.
வறுமையின் பிடியில் இருந்த ஜெய வாகினியின் நிலையை அறிந்த அவரது தோழி, இணையத்தில் அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். மொட்டைத் தலையுடனும், உடல் மிகவும் மெலிந்த நிலையிலும் அடையாளம் தெரியாமல் இருந்த அவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பலரது இதயங்களையும் உலுக்கியது. அந்தத் தகவலைப் பார்த்துவிட்டுப் பலரும் அவருக்கு உதவ முன்வருவதற்குள், சிகிச்சை பலனின்றி இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 4-ஆம் தேதி ஜெய வாகினி காலமானார். அவரது தோழி அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து வெளிச்சத்திற்கு கொண்டு வராதிருந்தால், பலரைத் தன் நடிப்பால் ரசிக்க வைத்த ஒரு கலைஞரின் இந்த சோகமான மரணம் கூட வெளியில் தெரியாமல் போயிருக்கும் என்பதுதான் வேதனையான உண்மை.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…