தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழலில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்த அவர், கட்சித் தலைமை இட்ட பணியை ஏற்று பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இடையில் அவருக்கு ‘சக்தி கேந்திரா’ பொறுப்பாளர் பதவி வழங்கப்படலாம் என்று பேசப்பட்டாலும், கடைசி நேரத்தில் அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை.
இருப்பினும், தேர்தலில் அண்ணாமலையின் அயராத களப்பணியைப் பாராட்டும் வகையில், அவருக்கு டெல்லியில் முக்கியத்துவம் அளிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, ஆந்திரப் பிரதேசத்தில் ஜூன் மாதம் காலியாகும் நான்கு ராஜ்ய சபா எம்பி இடங்களில் ஒன்றை அண்ணாமலைக்கு ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு தற்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு போதிய பலம் இல்லாததால், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து அந்த இடத்தைப் பாஜக கைப்பற்ற உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்போது, அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தலுக்குப் பிறகு எல். முருகன் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு மத்திய இணையமைச்சரானதைப் போலவே, தற்போதைய சூழல் அண்ணாமலைக்குச் சாதகமாக மாறியுள்ளது. அண்ணாமலைக்கும் சந்திரபாபு நாயுடு குடும்பத்திற்கும் இடையிலான நெருக்கமான நட்புறவும் இதற்கு ஒரு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.
மறுபுறம், ஐந்து ஆண்டுகள் அமைச்சராக இருந்த எல். முருகனின் செயல்பாடுகளில் கட்சித் தலைமை அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன்காரணமாகவே அவர் அவினாசி தொகுதியில் போட்டியிட அனுப்பப்பட்டதாகவும், தற்போது அவரை அமைச்சரவையில் இருந்து விடுவித்துவிட்டு புதிய முகமான அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முக்கிய அரசியல் நகர்வுகளுக்குப் பின்னணியில் பாஜக மேலிடத் தலைவர் பி.எல். சந்தோஷின் ஆதரவு அண்ணாமலைக்கு வலுவாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…