சீனாவின் ஹெபேய் மாகாணத்தில் நடந்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சி தரும் கொடூர வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. ஓட்டுநர் ஒருவர் செய்த வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள், பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் அந்த ஓட்டுநரின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளனர்.
அங்குச் சிறிதும் இரக்கமின்றி அந்த ஓட்டுநரின் தாய் மற்றும் அவரது 3 வயதுப் பச்சிளங் குழந்தையைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொடூரமாகப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது. எந்தவிதப் பயமும் இன்றி அந்த நபர் இந்தக் கொடூரக் கொலையைச் செய்யும் காட்சிகள் இணையத்தில் பரவி பார்ப்போரின் நெஞ்சை நடுங்க வைத்துள்ளது.
இருப்பினும், இந்த வீடியோ 2020-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பழைய சம்பவம் என்றும், தற்போதைய நிகழ்வு அல்ல என்றும் சிலர் இணையத்தில் சுட்டிக்காட்டி வருகின்றனர். எதுஎவ்வாறாயினும், ஒரு விபத்துக்காக 3 வயதுக் குழந்தையையும், வயதான தாயையும் கொடூரமாகப் படுகொலை செய்த சம்பவம் உலகளவில் இணையவாசிகளிடையே கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…