Categories: உலகம்

835 ஆண்டுகள் சிறை! அமெரிக்காவை அலறவைத்த இந்திய வம்சாவளி சகோதரர்கள்… உலக நாடுகளை அதிரவைக்கும் பின்னணி…!!!

Spread the love

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளிச் சகோதரர்களான பாஸ்கர் சவானி மற்றும் அருண் சவானி ஆகியோர், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்த பிரம்மாண்டமான மோசடி சாம்ராஜ்யம் தற்போது அமெரிக்க நீதிமன்றத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. ‘சவானி குரூப்’ என்ற பெயரில் நிறுவனக் கூட்டமைப்பை உருவாக்கி, விசா மோசடி, மருத்துவக் காப்பீடு ஏமாற்று வேலை மற்றும் பணமோசடி எனப் பல வழிகளில் சுமார் 250 கோடி ரூபாய் (32 மில்லியன் டாலர்) முறைகேடாகச் சம்பாதித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த மார்ச் 9, 2026 அன்று இவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது.

பல் மருத்துவரான பாஸ்கர் சவானி, ஏழை எளிய மக்களுக்கான ‘மெடிகேட்’ (Medicaid) காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தி அரசுப் பணத்தைச் சுருட்டியுள்ளார். அமெரிக்காவில் இல்லாத மருத்துவர்களின் அடையாள எண்களைப் பயன்படுத்திப் போலி ரசீதுகளைத் தயாரித்தது மட்டுமின்றி, ‘மனிதர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது’ என எச்சரிக்கப்பட்ட தரமற்ற மருத்துவ உபகரணங்களை நோயாளிகளுக்குப் பொருத்தி அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவித்துள்ளனர். இத்துடன் நில்லாமல், இந்தியாவிலிருந்து எச்-1பி (H-1B) விசா மூலம் அழைத்து வரப்பட்ட பணியாளர்களின் சம்பளத்தைச் சுரண்டியதுடன், விசா கட்டணத்தையும் அவர்களிடமே பெற்று மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் ஈட்டிய சட்டவிரோதப் பணத்தை மறைக்கப் பல வங்கிக் கணக்குகளைத் தொடங்கிப் பணமோசடி செய்ததோடு, வீட்டுப் பராமரிப்புச் செலவு மற்றும் பிள்ளைகளின் கல்விக் கட்டணம் போன்ற தனிப்பட்ட செலவுகளை நிறுவனத்தின் கணக்கில் காட்டிப் பிரம்மாண்டமான வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த மெகா மோசடி விவகாரத்தில் எப்.பி.ஐ (FBI) விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, அதன் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்திப்பது போன்ற பிம்பத்தைச் சமூக வலைதளங்களில் உருவாக்கித் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றுள்ளனர். இருப்பினும், அமெரிக்க நீதித்துறையின் தீவிர விசாரணையில் இவர்களது அனைத்துத் திட்டங்களும் தவிடுபொடியாகின.

தற்போது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பாஸ்கர் சவானிக்கு 420 ஆண்டுகள் மற்றும் அருண் சவானிக்கு 415 ஆண்டுகள் என மொத்தம் 835 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க வரலாற்றிலேயே இந்திய வம்சாவளியினர் செய்த மிகப்பெரிய நிதிக்கூலிப் புகாராக இது பார்க்கப்படுகிறது. இவர்களுக்கான இறுதித் தீர்ப்பு வரும் ஜூலை 2026-ல் வழங்கப்பட உள்ளது. இந்தத் தீர்ப்பு, வெளிநாடுகளில் அதிகாரத்தையும் மருத்துவத் தொழிலையும் தவறாகப் பயன்படுத்துவோருக்கு ஒரு மிகப்பெரிய பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Muthu Mani

Recent Posts

“அப்பா என்னை காப்பாத்துங்க…” மரணத்தின் விளிம்பிலிருந்து வந்த அந்த ஒரு போன் கால்… நெஞ்சை பிளக்கும் லக்னோ விபத்தின் சோக சம்பவம்….!

உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…

2 minutes ago

“மொபைல் போனில் வந்த ‘அந்த’ புகைப்படம்”… திருமண வீட்டை மரண வீடாக மாற்றிய சைபர் சைக்கோ…. மகளுடன் சேர்ந்து விஷம் குடித்து உயிரை மாய்த்த பெற்றோர்…!

மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…

11 minutes ago

634 கோடி ஊழல் வழக்கு… முன்னாள் அமைச்சர் நேருவுக்கு செக் வைத்த விஜய் அரசு… ஜூலை 10-ல் காத்திருக்கும் பெரிய சம்பவம்…!

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…

19 minutes ago

அதிமுக-வை அசிங்கப்படுத்திய விஜய்.. கோபப்படாமல் ‘நைஸ் ஸ்பீச்’ சொன்ன வேலுமணி… ஒரே நாளில் மாறிய தமிழக அரசியல் களம்….!

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளித்து தமிழக முதல்வர் விஜய் இன்று…

29 minutes ago

“ஐயோ காப்பாத்துங்க” நடுவானில் கொழுந்துவிட்டு எரிந்த ஹாட் ஏர் பலூன்.. பிரேசிலில் 8 பேர் உடல்கருகி பரிதாப பலி – பதைபதைக்க வைக்கும் பகீர் விபத்து..!!

பிரேசில் நாட்டின் சாண்டா கதரீனா மாகாணத்தில் உள்ள பிரையா கிராண்டே பகுதியில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஹாட் ஏர் பலூன்…

32 minutes ago

அதை செய்வதற்கு தவெகவினருக்கே வெட்கமில்லை… நாங்க ஏன் வெட்கப்படணும்..? ஆ. ராசா பரபரப்பு குற்றசாட்டு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பிற கட்சி அமைச்சர்களை, திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஆ. ராசா…

38 minutes ago