இப்படி ஒரு முடிவா?… யார் அந்த முகமூடி மனிதர்கள்?… துளைத்த 8 தோட்டாக்கள்… ரத்த வெள்ளத்தில் மிதந்த சாலை… அடுத்தடுத்து நடக்கும் குற்றங்கள்…!!

Spread the love

பீகார் மாநிலம் ஆரா பகுதியில், ஓய்வுபெற்ற மத்திய சுங்கத்துறை அதிகாரியான 72 வயது ராம் குமார் சிங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போஜ்பூர் மாவட்டத்தின் துமாரியா கிராமத்தைச் சேர்ந்த இவர், பணி ஓய்வுக்குப் பின் நவாடா காவல் சரகத்திற்குட்பட்ட கன்காபுரி பகுதியில் வசித்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வியாழக்கிழமை அதிகாலை தனது இல்லத்திற்கு அருகே வழக்கமான நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் முகத்தை மூடிக்கொண்டு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

சுமார் எட்டு தோட்டாக்கள் உடலைத் துளைத்ததில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடுவதற்குள் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த நவாடா காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்தத் தாக்குதலின் பின்னணி என்ன, முன்விரோதம் ஏதேனும் காரணமா என்பது குறித்தும், தப்பியோடிய குற்றவாளிகளை அடையாளம் காணவும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Gayathri

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

5 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

5 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

5 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago