சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது மனைவியின் காலடியில் விழுந்து, தரையில் துப்பப்பட்ட எச்சிலை நாக்கினால் நக்கும் கொடூரமானக் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த இளைஞருக்குப் பின்னால் நிற்கும் ஒரு நபர், “இனி இவன் உன்னை அடிக்க மாட்டான்” என்று கூறிக்கொண்டே, அந்த இளைஞரை அசிங்கமான முறையில் அவ்வாறு செய்யுமாறு கட்டாயப்படுத்தி வழிநடத்துகிறார். இந்தச் செயலைப் பார்த்து அந்தப் பெண் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சிரித்துக் கொண்டிருப்பது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
எந்தவொரு சூழலிலும் ஒரு மனிதனை மற்றொரு மனிதரின் காலில் விழ வைத்து, எச்சிலைச் சுவைக்கச் செய்வது என்பது மனிதத்தன்மையற்றச் செயலாகும். கணவன்-மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க எத்தனையோ சட்டப்பூர்வமான மற்றும் நாகரீகமான வழிகள் உள்ளன. ஆனால், தண்டனை என்ற பெயரில் ஒருவரின் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையில் இத்தகைய இழிவானச் செயலில் ஈடுபடுவது, நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
சமூகத்தில் ஒருவரை மண்டியிடச் செய்து, அவரது சுயமரியாதையைப் பறிக்கும் இதுபோன்ற வன்கொடுமைகள் சட்டப்படி குற்றமாகும். தவறு செய்தவரை நல்வழிப்படுத்துவதற்குப் பதிலாக, அவரைப் பொதுவெளியில் கேலிப்பொருளாக மாற்றுவதும், அதை வீடியோ எடுத்துப் பரப்புவதும் கடும் கண்டனத்திற்குரியது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், அந்த வீடியோவில் உள்ள நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதோடு, மனித உரிமைகளை மீறும் இதுபோன்ற செயல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…