மாட்டை விற்று மனைவியை படிக்க வைத்த கணவர்… அரசு வேலை கிடைத்ததும் ‘கழட்டிவிட்ட’ மனைவி… நடுரோட்டில் தவிக்கும் கூலித் தொழிலாளி..!!

Spread the love

லூதியானாவில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரியும் ராஜேஷ் வர்மா, தனது மனைவி ரேணுவை நர்ஸிங் (ANM) படிக்க வைக்க இரவு பகலாக உழைத்தார். தனது வாழ்வாதாரமாக இருந்த இரண்டு எருமைகளை விற்றும், கரும்புப் பயிர்களை விற்றும், கடன் வாங்கியும் மனைவியின் கனவிற்காக ராஜேஷ் பணத்தைச் சேர்த்தார். கணவனின் தியாகத்தால் ரேணு படிப்பை முடித்து ஒரு அரசு வேலையையும் பெற்றார்.

இருப்பினும், அரசு வேலை கிடைத்தவுடன் கதையில் ஒரு அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டது. வேலை கிடைத்த கையோடு ரேணு தனது கணவருடன் வாழ மறுத்து அவரைப் பிரிந்து சென்றார். அத்துடன் நிற்காமல், கணவர் தரப்பிலிருந்து 10 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரதட்சணை கேட்பதாகக் கூறி, ராஜேஷ் மீது அவர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

தற்போது ராஜேஷ் தனது பார்வையற்ற மற்றும் நோய்வாய்ப்பட்ட தாயுடன் நீதிக்காகக் காவல் நிலையங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். மனைவியை முன்னேற்றத் தான் செய்த தியாகங்கள் அனைத்தும் வீணாகிப் போனதுடன், இப்போது பொய்யான வழக்குகளையும் சந்திப்பதாக ராஜேஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“நான் இங்கேதான் இருக்கிறேன்!”… நள்ளிரவு 12:07 மணி.. போனில் வந்த அந்த மெசேஜ்… புதிய வீட்டில் பெண்ணிற்கு காத்திருந்த மரண பயம்… நடுங்க வைக்கும் பின்னணி…!!!

சரியாக நள்ளிரவு 12:07 மணி. நிஷா தனது புதிய பிளாட்டில் முதல் முறையாக தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். வெளியே மெல்லிய…

10 minutes ago

“அரசு கஜானாவுக்கு வேட்டு வைத்த முதல்வர்”… கோடி கோடியாக கொட்டிய 717 கடைகள் மூடல்… அதிர்ச்சியில் ஊழியர்கள்…!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய், மக்கள் நலன் கருதி வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு…

11 minutes ago

BREAKING: CM விஜய் அதிரடி உத்தரவு… தமிழகத்தில் உடனடியாக மாற்றம்….!

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

17 minutes ago

துரோகத்தின் உச்சம்!… கணவனின் ஸ்னாப்சாட் பார்த்த மனைவி.. உள்ளே காத்திருந்த பேரதிர்ச்சி… பி.எச்டி முடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்….!!!

கான்பூரில் பி.எச்டி (PhD) முடித்த ஒரு பெண், பெண் குழந்தை பிறந்த காரணத்திற்காகத் தனது கணவரால் கைவிடப்பட்டு, ஏமாற்றப்பட்ட அதிர்ச்சி…

18 minutes ago

“மணமகளுக்கு 15.. மணமகனுக்கு 22” …. சிறுமிக்கு நடந்த ரகசிய திருமணம்… திருமண ஊர்வலத்தில் சென்றவர்களுக்கும் காத்திருந்த அதிர்ச்சி…!

புனேவின் பாலேவாடி பகுதியில், 15 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே…

20 minutes ago

“3 பேரும் சேர்ந்து தான் கொலை பண்ணோம்”… நண்பனை கொன்று செல்போனில் வீடியோ எடுத்த பள்ளி மாணவர்கள்… சேலத்தில் நடந்த கொடூரம்…!

சேலம் மாவட்டம் மணியனூர் பகுதியில் மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதத்தால் 19 வயது…

25 minutes ago