உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் அமைந்துள்ள லக்னோ-கான்பூர் விரைவுச்சாலையில் எதிர்பாராத விதமாக நுழைந்த பழுப்பு நிற குதிரை ஒன்று, அதிவேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு இடையே ஓடத் தொடங்கியது. அதிவேக நெடுஞ்சாலையில் குதிரை கட்டுப்பாடின்றி ஓடியதால் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் விபத்தைத் தவிர்க்க வாகனங்களின் வேகத்தைக் குறைக்க வேண்டியிருந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது.
நிலைமையை உணர்ந்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ரோந்துப் குழுவினர், உடனடியாக தங்களது வாகனத்தில் குதிரையைப் பின்தொடர்ந்தனர். ரோந்து வாகனத்தின் பின்புறத்திலிருந்து ஊழியர் ஒருவர் நீண்ட குச்சியின் உதவியுடன் குதிரையைச் சாலையின் ஓரமாக வழிநடத்த முயன்றார். இருப்பினும், குதிரை தொடர்ந்து ஓடியதால் சுமார் 7 முதல் 8 கிலோமீட்டர் தூரம் வரை அதைத் துரத்திச் சென்று, லால்ஹஞ்ச் பைபாஸுக்கு 2 கி.மீ முன்பாக பாதுகாப்பாகச் சாலையிலிருந்து வெளியேற்றினர்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விரைவுச்சாலையின் பாதுகாப்பு வசதிகள் குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன. விலங்குகள் உள்ளே நுழைவதைத் தடுக்க தடுப்புவேலிகள் மற்றும் கதவுகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும், குதிரை எவ்வாறு உள்ளே நுழைந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. நல்வாய்ப்பாகப் பெரிய அளவிலான விபத்துகள் எதுவும் நிகழவில்லை என்றாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க ரோந்துப் பணிகளையும் பாதுகாப்பு வேளிகளையும் மேலும் பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…