ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது அனாதைச் சிறுமியை, அவரது பெற்றோர் மறைவுக்குப் பின் வளர்த்து வந்த சொந்த அத்தையும் மாமாவும் சேர்ந்து, போலி ஆவணங்கள் மூலம் வயது வந்தவராகச் சித்தரித்து பல்வேறு மாநிலங்களில் உள்ள ஸ்பாக்களுக்கு விற்று பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கேரள மாநிலம் கோவளம் மற்றும் பூவார் பகுதிகளில் உள்ள ஸ்பாக்களில் அச்சிறுமி அடைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து ஒரு வாலிபரின் உதவியுடன் சிறுமி தப்பியோடியுள்ளார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் அளித்த காணாமல் போன புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலிஸார், சிறுமியை மீட்டு விசாரணை நடத்தியபோதுதான் இந்த அதிரவைக்கும் உண்மைகள் அம்பலமாகின.
சிறுமியின் அத்தை, மாமா மற்றும் கேரளா ஸ்பா மேலாளர்கள் சஞ்சித் குமார், நிஷாந்த் ஆகிய 4 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ள காவல்துறையினர், ஜூலை மாதத்திற்கு முன்பு சென்னை கூடுவாஞ்சேரி மற்றும் ஹைதராபாத் ஸ்பாக்களில் அச்சிறுமியை விற்றுச் சீரழித்தது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…
வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…
கர்நாடக மாநிலம் விஜயபுராவில், காலை நடைப்பயிற்சி சென்ற கணவரைக் கள்ளக்காதலனுடன் சேர்ந்து எஸ்யூவி காரால் மோதிக் கொன்று, அதைச் சாலை…
எட்டாவில் 9 நாட்கள் விரதம் இருந்த 12 வயது சிறுமி, சாமுண்டா தேவி கோயில் திருவிழாவில் சௌமேய் சாப்பிட்டபோது அது…
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாகக் காலியாக உள்ள மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் ஆணையர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக…