பெண்களை வேட்டையாடும் பயங்கரவாதிகள்… பாகிஸ்தான் மதகுருவின் பகிரங்க வாக்குமூலத்தால் உலகமே அதிர்ச்சி…!!!

Spread the love

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெண்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தங்களை மதப் போராளிகள் என்று அழைத்துக்கொள்ளும் பயங்கரவாதிகள், அங்குள்ள அப்பாவி முஸ்லிம் சிறுமிகள் மற்றும் பெண்களைக் மிகக் கொடூரமாகச் சுரண்டுவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த மதகுரு முஃப்தி சயீத் கான் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.

மேலும் ஒரு துண்டு ரொட்டிக்காகக் கூட பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தும் அவல நிலை அங்கு நிலவுவதாகவும், பசியைப் போக்க உணவு வழங்க வேண்டும் என்றால் அதற்குப் பதிலாகப் பாலியல் இச்சையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்குப் பெண்கள் தள்ளப்படுவதாகவும் அவர் அந்த வீடியோவில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், பாகிஸ்தானின் உண்மை முகம் மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் அம்பலமாகியுள்ளது. காஷ்மீர் விடுதலை என்ற போர்வையில் செயல்படும் பயங்கரவாதிகள், தங்கள் சொந்த மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கே இத்தகைய அநீதிகளை இழைப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுநாள் வரை பகுதியில் நடக்கும் அநீதிகளை மறைத்து வந்த பாகிஸ்தானுக்கு, அந்நாட்டின் மதகுருவே அளித்திருக்கும் இந்த வாக்குமூலம் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் அந்தப் பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சர்வதேச அளவில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Rajeshwari

Recent Posts

உஷார்! உங்க போனுக்கும் இந்த மெசேஜ் வரலாம்… வடமாநில கும்பலின் மார்பிங் மிரட்டலுக்கு பலியான 20 வயது இளைஞர்… வெறும் 3000 ரூபாய் கடனுக்கு இப்படியா…!

ஆன்லைன் கடன் செயலிகளின் பேராசைக்கும், டிஜிட்டல் மிரட்டல்களுக்கும் மற்றுமொரு இளம் உயிர் பலியாகியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…

8 minutes ago

அமெரிக்கா போட்ட ஒரே ஒரு போடு… ராக்கெட் வேகத்தில் எகிறிய ‘தங்கம்’… இனி சாமான்யர்கள் வாங்கவே முடியாதா…!

அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…

25 minutes ago

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் ‘ஒமேகா பிளாக்’… இந்திய பருவமழையை காலி செய்யப் போகிறதா… அதிர்ச்சித் தகவல்…!

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…

49 minutes ago

இவன் மனிதனே இல்லை…! இரண்டு லாரிகளுக்கு நடுவே புகுந்த ‘மரண ஓவர்டேக்’… சோசியல் மீடியாவை உலுக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

53 minutes ago

முடியலடா சாமி..! கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…

56 minutes ago