தினமும் அரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குப் பெரும் நன்மைகளைத் தருகிறது. தினமும் சுமார் 10,000 அடிகள் நடப்பதன் மூலம் 500 கலோரிகள் வரை எரிக்க முடியும் என்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த பயிற்சியாகும். இது இதயத் தசைகளை வலுப்படுத்தி ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதுடன், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவும், செரிமானக் கோளாறுகளை நீக்கவும் பெரிதும் உதவுகிறது.
உடல் ரீதியான மாற்றங்கள் மட்டுமின்றி, நடைப்பயிற்சியால் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோன்கள் சுரப்பதால் மனம் அமைதி அடைந்து ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிறது. மூட்டுகளில் திரவ உற்பத்தியைத் தூண்டி மூட்டு வலி வராமல் தடுப்பதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் இது அதிகரிக்கிறது. முகம் பொலிவு பெறவும், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும் இந்த எளியப் பழக்கம், நூற்றுக்கணக்கான நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்து நீண்ட ஆயுளை வழங்குகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…