பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி உதவி மேலாளராகப் பணிபுரிந்த இவரது மனைவி புவனேஸ்வரி, கணவரின் கொடுமை தாளாமல் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்ததோடு, நீதிமன்றத்தில் விவாகரத்தும் கோரியிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், தனது மனைவியைப் பழிவாங்க முடிவு செய்து கடந்த டிசம்பர் 24-ம் தேதி கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். இந்தக் கொலையைச் செய்வதற்கு முன்னதாக, பாலமுருகன் மூன்று முறை பீகார் மாநிலத்திற்குச் சென்று சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வாங்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், துப்பாக்கியைச் சரியாகக் கையாளுவதற்காக அங்கேயே 15 நாட்கள் தங்கிப் பயிற்சியும் எடுத்துள்ளார். முறையாகத் திட்டமிட்டுத் தனது மனைவியைத் தீர்த்துக்கட்டிய பாலமுருகனை பெங்களூரு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு படித்த பொறியாளர் தனது மனைவியைக் கொல்ல வெளிமாநிலத்திற்குச் சென்று பயிற்சி எடுத்த விவகாரம் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…