நீங்கள் உங்களுடைய ரேஷன் கார்டை அப்டேட் செய்தாக வேண்டும் . ஏற்கனவே முடித்திருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை . நீங்கள் தொடர்ந்து அரிசி , பருப்பு , சர்க்கரை வாங்க வேண்டுமானால் கட்டாயம் அப்டேட்டை முடிக்க வேண்டும். மத்திய , மாநில அரசுகள் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதில் ஒன்று ரேஷன் திட்டம் ,இது ஏழை எளியோர் மக்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது .
மாதம் தோறும் விலை இல்லா அல்லது இலவசமாக உணவு தானியங்களை பெறுகின்றனர். ஒரு ஒரு குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு மிகவும் முக்கியம். அதில் குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் பெயரை சேர்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் ரேஷன் பொருள்களும், உதவிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ரேஷன் கார்டிற்கு புதிதாக அப்டேட் ஒன்று வந்துள்ளது. அனைவரும் கட்டாயம் அப்டேட் செய்தாக வேண்டும் இல்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். ரேஷன் கார்டுகளுக்கான கேஒய்சி சரிபார்ப்பை அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இதுவரை மில்லியன் கணக்கான மக்களின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.
ரேஷன் திட்டத்தில் நடக்கும் தில்லுமுல்லுகளை வெளியே கொண்டு வருவதற்காக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி ரேஷன் கார்டுகள் நிறைய புலனில் உள்ளதாம். கேஒய்சி சரிபார்த்து போலியானது , செயலற்றது என அனைத்து அட்டைகளையும் ரத்து செய்ய முடியும். அதனால் அரசு கொடுத்து இருக்கும் காலத்துக்குள் கேஒய்சி செய்முறையை ரேஷன் கார்டுகளில் இணையுங்கள். இணைக்காவிட்டால் முதலில் செயலிழக்க செய்யப்பட்டு பின்னர் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
இந்தியா முழுவதும் விதிமுறைகளை செயல்படுத்தி கொண்டு வருகிறார்கள். ரேஷன் கார்டு கேஒய்சி சரிபார்க்க இரண்டு முறைகள் உள்ளது ஆன்லைன் ஆஃப்லைன். வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் செய்ய விரும்பினால் முதலில் நீங்கள் ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் . பின்பு, மாநில உணவு துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். அதில் ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்க அல்லது eKYCஐ செய்ய விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும் மற்றும் ரேஷன் கார்டு எண் தேவையான தகவல்களை பதிவு செய்ததும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்த மொபைலுக்கு OTP ஒன்று வரும் உங்கள் செய்முறை நிறைவடைந்தது.
அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பயோமெட்ரிக் முறை மூலம் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம். இது மட்டுமில்லாமல் ஜன் சேவா கேந்திரா அல்லது பொது சேவை மையத்திலும் கேஒய்சி செய்முறைகளை செய்து முடிக்கலாம். அனைவரும் கட்டாயம் ரேஷன் கார்டில் கேஒய்சி யை சரிப்பார்க்க வேண்டும். இதைப் பற்றி மேலும் தகவலுக்கு மாநில உணவுத்துறை வலைத்தளம் அல்லது ரேஷன் கடைகளில் தகவல் பெறலாம்.
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…