போன் செய்து எடுக்காத காதலி.. அடுத்த நாள் காத்திருந்த அதிர்ச்சி… மறுநாளே உயிரை மாய்த்துக்கொண்ட காதலன்…!

Spread the love

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ், மகன் யுவராஜ் (22). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். யுவராஜ் நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த பெற்றோர்,தா.பழூர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பெயரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகள் சுமத்ரா (18). இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். படிப்பிற்காக கல்லூரியின் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, தனது தோழிகளுடன் தங்கிப் படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு சுமத்ரா தனது தோழிகளுடன் உணவு சாப்பிட்டுவிட்டு உறங்கியுள்ளார். சக மாணவிகள் நள்ளிரவில் எழுந்து பார்த்த பொழுது, மின்விசிறிக்காகக்  கொடுக்கப்பட்ட கொக்கியில் சுடிதார் துப்பட்டா மூலமாக சுமத்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட சக மாணவிகள் உடனடியாக திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுமத்ராவை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுமத்ராவும், யுவராஜும் காதலிப்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் சுமத்ராவுக்கு யுவராஜ் போன் செய்துள்ளார். அப்போது அவர் போனை எடுக்காததால், சுமத்ராவின் தோழிகளுக்கு தொடர்பு கொண்ட பொழுது, சுமத்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனைக் கேட்டு பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான யுவராஜ், தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. காதலர்கள் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரே நாளில் காதலர்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Srimathi

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

3 மணத்தியாலங்கள் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

3 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

3 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

3 மணத்தியாலங்கள் ago