உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 31 வயதுப் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது சந்தீப் என்பவரது வீட்டில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. திருமணமான மம்தா என்பவருக்கும், சந்தீப்பிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. சந்தீப்பிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மம்தா நேற்று முன்தினம் இரவு சந்தீப் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது பெற்றோரும் சகோதரிகளும் வீட்டில் இருந்துள்ளனர். சந்தீப்பின் மனைவி தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
நேற்று காலை 6 மணி அளவில், சந்தீப் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற நேரத்தில், அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் மம்தாவோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அவர்கள், வீட்டில் இருந்த கோடரியால் மம்தாவைத் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சந்தீப் திரும்பி வந்தபோது, மம்தா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…