லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி தற்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் லியோ படம் ரிலீஸ் ஆனது.
பல இடங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி போடப்பட்டுள்ளது. கேரளாவில் 3.50க்கே லியோ படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் எல்சியூவில் இணைந்துள்ளது. ஆனால், காலையில் இருந்தே தியேட்டர்களில் கச்சேரியை ஆரம்பித்துள்ளனர் தளபதி ரசிகர்கள். இதுவரை லியோ திரைப்படம் குறித்து எந்தவொரு நெகடிவ் விமர்சனங்களும் வரவில்லை.
ரசிகர்கள் மட்டுமின்றி காலையிலிருந்து பிரபலங்கள் பலரும் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
அதாவது லியோ படத்தின் முதல் நாள், முதல் காட்சியின் போது திரையரங்கில் வைத்து தனது காதலியை நிச்சயம் செய்து கரம் பிடித்துள்ளார். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக அனைவரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புதிய புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…
பள்ளி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் ஏராளமான உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்கள்…
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த லெட்சுமணன் (15) என்ற பத்தாம் வகுப்பு மாணவன், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் கொடூரமாகக்…
சேலத்தில் தங்கி படித்து வந்த நெல்லையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ மாணவி காதல் விவகாரத்தில் மர்மமான முறையில் விடுதியில் உயிரிழந்து…
தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நாய்கள் எப்போது கடிக்கும் என்பதை அதன் மனநிலையைப் பார்த்து யாராலும் கணிக்க…
வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…