#image_title
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. தங்கலான் திரைப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பா.ரஞ்சித் அடுத்ததாக சூர்யாவின் 45-வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்திற்கு ஜெர்மன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
நேற்று சென்னையில் வைத்து படத்தின் பூஜை நடைபெற்றது. ஓர் விமானத்திலிருந்து ஒருவர் பாராசூட் மூலம் கீழே குதிப்பது போலவும் போஸ்டர் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இரண்டாம் உலகப்போரை மையப்படுத்தி இந்த படம் அமையும் என கூறப்படுகிறது.
தங்கலான் படம் வெற்றி பெற்றதால் சூர்யாவை வைத்து பா.ரஞ்சித் இயக்கும் இந்த படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா நடித்து கங்குவா திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி திரைக்கு வரவுள்ளது. பிதாமகன் படத்தில் விக்ரமும், சூர்யாவும் இணைந்து நடித்தனர். மாறுபட்ட கதைக்களம் கொண்ட இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கதாகும். இதே போல பா.ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஜேர்மன் படமும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவில் உள்ள கூகுளின் 'அனந்த்' அலுவலகத்தை அர்பிதா என்ற இளம்பெண் டிஜிட்டல் முறையில் சுற்றிக் காட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில்…
மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர் ரவீந்திர குல்மேத்தே என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே கூலிப்படையை…
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை முதல்வராகப் பதவியேற்கத் தயாராகி வரும் நிலையில்,…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ள அதிரடியான தேர்தல் வாக்குறுதிகள், அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில்,…
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள பன்மன்கி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில், மதிய உணவில் சிலந்திகளும் பூச்சிகளும் கண்டறியப்பட்ட…
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள குமானபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லபாரி பகுதியில், பழுதடைந்த நிலையில் இருந்த மூன்று மாடி…