உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி நகரின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரான அனிதா சௌத்ரி, கடந்த 4-ம் தேதி இரவு பணி நிமித்தமாக ஆட்டோவை ஓட்டிச் சென்றபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சாலையோரம் அனிதாவின் உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அனிதாவின் முன்னாள் கணவர் முகேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்தத் திட்டமிட்ட படுகொலையை அரங்கேற்றியது அம்பலமானது.
முகேஷும் அனிதாவும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்த நிலையில், இடையில் ஏற்பட்ட மனக்கசப்பால் அனிதா அவரைப் பிரிந்து வேறொரு திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த முகேஷ், அவர்களின் பழைய திருமண நாளிலேயே அனிதாவைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார். தலைமறைவாக இருந்த முகேஷைப் பிடிக்க முயன்றபோது அவர் போலீசாரைத் தாக்க முயன்றதால், தற்காப்பிற்காக போலீசார் அவரது காலில் சுட்டு அதிரடியாகக் கைது செய்தனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…