FLASH NEWS: தமிழகத்தில் புதிய கட்சி ‘ஜெ.குரு பாமக’ உதயமானது… காலையிலேயே பரபரப்பு…!

Spread the love

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை ‘ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்தக் கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். தனது தந்தையின் பெயரைத் தாங்கிய இந்த அமைப்பின் மூலம் வன்னியர் சமூக மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் நல்வாழ்விற்காகவும் பாடுபடப்போவதாக அவர் உறுதியளித்துள்ளார். மேலும், வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள விருதாம்பிகை, பாமக தற்போது ஒரு குடும்பக் கட்சியாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தந்தை மற்றும் மகனின் அதிகாரப் போட்டியால் வன்னியர் சமூகத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்றும், கொள்கைகளை மறந்து செயல்படும் பாமகவிடமிருந்து வன்னியர் இன மக்களின் நலனை மீட்டெடுக்கவே இந்தப் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். விருதாம்பிகையின் இந்த அதிரடி முடிவு தமிழக அரசியலில், குறிப்பாக வட மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

5 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

5 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

8 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

8 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago