ஈரோட்டில் தமிழக வெற்றி கழகம் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திருச்செங்கோட்டில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் சேவை செய்ய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. ஈரோட்டில் நடைபெற உள்ள செயல் வீரர்கள் கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் கலந்து கொள்கின்றார். வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி விஜய் ஈரோடு வரவுள்ளதால் அதற்கான பணிகள் முழு வயிற்றில் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலீஸ் சார்வில் இரண்டு மணி நேரம் அதாவது அன்று பகல் 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தூய்மையான ஆட்சி, மக்கள் விரும்பும் ஆட்சி, மக்கள் சக்தியால் வரும் ஆட்சி வரும் நல்ல நாளை நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். கரூர் ரோடு ஷோ, புதுச்சேரிக்கு பிறகு தமிழ் மண்ணான ஈரோட்டில் விஜய் கால் வைக்கின்றார். 18 என்றால் 9 எண் வருகிறது. இதில் அனைத்து நட்சத்திரங்களும் அடங்கும். தமிழக வெற்றிக்கழகம் தொண்டர்கள் 10,000 பேர், பொதுமக்கள் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள்.
ஆம்புலன்ஸ், கண்காணிப்பு கேமரா, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள், விஜய் வரும் வழி, பொதுமக்கள் வருவதற்கு, கலைந்து செல்ல தனி இடமாகியவை போலீஸ் விதிமுறையாக இருந்தது, அதனை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதே சமயம் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பல முன்னாள் தலைவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாகவும் அதற்கான வேலைகளை செங்கோட்டையன் தீவிரமாக செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…