பக்கா ஸ்கெட்ச் போடும் திமுக..! 164 தொகுதிகளில் தனித்து போட்டி… தோழமைக் கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி… DMK கூட்டணியின் தொகுதிப் பட்டியல் கசிந்தது…!!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. 2026 தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸிற்கு 25 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சிபிஎம் கட்சிக்கு 6 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது

மேலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொமதேக), கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (மநீம) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளுக்குத் தலா 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு (மமக) 2 தொகுதிகளும் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இவை தவிர, தனியரசு, வேல்முருகன், கருணாஸ் மற்றும் ஸ்ரீதர் வாண்டையார் ஆகியோருக்கும் குறிப்பிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ஒதுக்கீடுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

17 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

37 minutes ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

47 minutes ago

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

57 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

1 மணத்தியாலம் ago