கர்நாடக மாநிலம் துமகுருவில், ஜோதிடரின் வார்த்தைகளை நம்பி பெற்ற தாயையே மகளும் மருமகனும் இணைந்து படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துமகுரு நகரின் ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வந்த 55 வயதான புஷ்பலதா என்பவரே, தனது மகள் சுசித்ரா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகியோரால் கொல்லப்பட்டவர் ஆவார். மூடநம்பிக்கையும், சொத்து ஆசையும் ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ள இந்த கொடூர சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுசித்ராவின் தந்தை சுமார் 18 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தந்தையின் இழப்பால் மனமுடைந்த சுசித்ராவும் சுரேஷும் ஒரு ஜோதிடரை அணுகியுள்ளனர். அப்போது அந்த ஜோதிடர், “உன் தந்தையை உன் தாய் புஷ்பலதா தான் செய்வினை (Black Magic) செய்து கொன்றுவிட்டார்; இப்போது உன்னையும் கொல்ல அவர் திட்டமிட்டுள்ளார்” என்று கூறியுள்ளார். இந்த அபத்தமான கூற்றை கண்மூடித்தனமாக நம்பிய சுசித்ரா, தனது தாயைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி இரவு, தாய் புஷ்பலதா தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது காலில் இருந்த முடியை அறுக்க சுசித்ரா முயன்றுள்ளார். அப்போது விழித்துக்கொண்ட தாய் கூச்சலிடவே, பயந்துபோன சுசித்ரா தலையணையால் தாயின் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் இது ‘மாரடைப்பால் ஏற்பட்ட இயற்கை மரணம்’ என உறவினர்களிடம் கூறி நாடகமாடியுள்ளார். இருப்பினும், புஷ்பலதாவின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விசாரணையில், ஜோதிடரின் பேச்சை நம்பியே இந்த கொலையைச் செய்ததாக சுசித்ரா ஒப்புக்கொண்டார். இருப்பினும், கொல்லப்பட்ட புஷ்பலதா தனது சொத்துக்களை விற்று வங்கியில் லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, இது வெறும் மூடநம்பிக்கையால் நடந்த கொலை தானா அல்லது சொத்தைப் பறிக்க ஜோதிடத்தை ஒரு காரணமாகப் பயன்படுத்திக் கொண்டார்களா என்ற கோணத்தில் கியாட்சந்திரா போலீசார் சுசித்ரா மற்றும் சுரேஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…