ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள சைந்தல் பகுதியில், தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்புரா கிராமத்தைச் சேர்ந்த 24 வயது ஜித்தேந்திர மீனா மற்றும் அவரது 22 வயது மனைவி மனிஷா மீனா ஆகிய இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு எட்டு மாதமே ஆன ஒரு பெண் குழந்தை உள்ளது. சனிக்கிழமை காலை தம்பதியிடையே ஏற்பட்ட வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்துள்ளது.
வாக்குவாதத்திற்குப் பிறகு ஜித்தேந்திரா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்தபோது, மனைவி மனிஷா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் நிலைகுலைந்து போன ஜித்தேந்திரா, தனது உறவினர்களுக்கு போன் செய்து “மனைவி தற்கொலை செய்துகொண்டார், நானும் உயிரை விடப்போகிறேன்” என்று கூறிவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, தம்பதியினர் இருவரும் சடலமாகத் தொங்க, அவர்களுக்கு கீழே 8 மாத பச்சிளம் குழந்தை அழுதுகொண்டிருந்த காட்சி நெஞ்சை உலுக்கியது.
தகவலறிந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தையின் அழுகுரலைக் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார் குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் இது குடும்பத் தகராறு காரணமாக நடந்த தற்கொலை என்று தெரிந்தாலும், போலீசார் மற்ற கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய சண்டையால் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டதால், அந்த எட்டு மாதக் குழந்தை இன்று ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…