தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அரசியல் கட்சிகளும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் எத்தனை தொகுதிகளை கேட்கலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
திமுகவை பொருத்தவரையில் தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு வாங்க வேண்டும் என்ற முடிவில் காங்கிரஸ் உள்ளது. திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே காங்கிரஸ் தரப்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதி என காங்கிரஸ் குரல் எழுப்பி வருகிறது. இப்படியான நிலையில் திமுகவிடம் 38 சீட்களை கேட்பதோடு 3 அமைச்சர் பதவிகளையும் காங்கிரஸ் டிமாண்ட் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கொடுத்தால் மட்டுமே கூட்டணி என்றும் குறைந்தபட்சம் வாய் வார்த்தையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்த மல்லிகார்ஜுன கார்கேவை ப. சிதம்பரம் கூடிய விரைவில் சந்திக்க உள்ளதாக பேசப்படுவதால் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…