தமிழகத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத தவெக அரசுக்கு காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றும், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்தும் ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சிகளுக்கு முதல்வர் விஜய் தரப்பில் இருந்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் சமீபத்திய கருத்துகள் முதல்வர் விஜய்க்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், இதன் காரணமாகவே தவெக தரப்பில் இருந்து அவர்களுக்கு மறைமுக கண்டிப்புச் சென்றதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசிய “அப்பாவை காணோம்” என்ற கமெண்ட்டை திருமாவளவன் வெளிப்படையாக விமர்சித்தது தவெக தரப்பை முகம் சுளிக்க வைத்தது. அதுமட்டுமின்றி, விசிகவிற்கு சமூகநீதித் துறைக்கு பதிலாக கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சகத்தை ஒதுக்க வேண்டும், இல்லையெனில் ஆதரவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என திருமாவளவன் பேசியதாகவும், திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் வாரியப் பதவிகளை அவர் மறைமுகமாக கோரியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த முதல்வர் விஜய், தனது முக்கிய ஆலோசகர்களுடன் விவாதித்து, “இரண்டு எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு அழுத்தம் கொடுப்பதை ஏற்க முடியாது, தேவையெனில் இடைத்தேர்தலை சந்திக்கலாம்” என்ற தொனியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மூலம் திருமாவளவனுக்கு எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. இதன் பின்னரே, “அரசிடம் எந்த டிமாண்டும் வைக்கவில்லை” என திருமாவளவன் தனது நிலையை மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் இடைத்தேர்தலில் வெற்றி பெறச் செய்வேன் என்று முதல்வர் கூறினார்” எனப் பேசியது குதிரைப் பேர அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு இடையே தேவையற்ற சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து உளவுத்துறை அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சென்று வைகோவிடம் முதல்வரின் அதிருப்தியைத் தெரிவித்தனர். அதன் விளைவாகவே, “எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியது நான்தான், முதல்வர் இல்லை” என்று வைகோ உடனடியாக விளக்கம் அளித்தார். தவெக தரப்பில் இருந்து சென்ற இந்த அதிரடி எச்சரிக்கைகளே திருமாவளவன் மற்றும் வைகோ ஆகியோரின் தொடர் விளக்கங்களுக்கும், கூட்டணியில் ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதிக்கும் முக்கிய காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனே நர்ஹே பகுதியில் உள்ள பூம்கர் பாலத்தில், அதிவேகமாக வந்த லாரி ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால்…
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…