தஞ்சாவூர் மாவட்டம் பின்னவாசல் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில், உயிருக்கு போராடிய ஒரு பெண்ணைக் காப்பாற்ற பெண் ஊழியர் ஒருவர் மேற்கொண்ட நடவடிக்கை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜனவரி 3-ஆம் தேதி இரவு ராமேஸ்வரம் விரைவு ரயில் வருவதற்காகக் கேட் மூடப்பட்டிருந்த நேரத்தில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் அவசரமாக அழைத்து வந்தனர்.
ரயில் நெருங்கிவிட்டதால் பாதுகாப்பு கருதி கேட்டைத் திறக்க முடியாத சூழல் நிலவியது. இதனால் ஒரு உயிர் முக்கியமா அல்லது ரயிலில் வரும் பல உயிர்கள் முக்கியமா என்ற இக்கட்டான நிலையில் கேட் கீப்பர் அருள் ஞானடெல்பின் தவித்தார். உறவினர்களின் கண்ணீர் போராட்டத்தைக் கண்ட அந்த ஊழியர், மனிதாபிமானத்துடன் ஒரு யோசனையை கூறினார்.
மூடியிருந்த கேட்டின் அடியில் குனிந்து அந்தப் பெண்ணை அழைத்து வருமாறு கூறியதுடன், அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தனது சொந்த இருசக்கர வாகனத்தையே தந்து உதவினார். விதிகளுக்குக் கட்டுப்பட்டு ரயிலில் வந்த பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த அதே வேளையில், தவித்த பெண்ணின் உயிரைக் காக்கவும் அவர் காட்டிய அந்தப் பேரன்பு சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த லெட்சுமணன் (15) என்ற பத்தாம் வகுப்பு மாணவன், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் கொடூரமாகக்…
சேலத்தில் தங்கி படித்து வந்த நெல்லையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ மாணவி காதல் விவகாரத்தில் மர்மமான முறையில் விடுதியில் உயிரிழந்து…
தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நாய்கள் எப்போது கடிக்கும் என்பதை அதன் மனநிலையைப் பார்த்து யாராலும் கணிக்க…
வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
திருவள்ளூரில் துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம், தொண்டர் ஒருவர் தனது மகளின்…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தில், ரூ.2 கோடி காப்பீட்டுப் பணத்திற்காகத் தனது கணவரையே மனைவியே கொலை செய்த…