அலெர்ட்..! கார் சாவியை ஒருபோதும் குழந்தைங்ககிட்ட கொடுக்காதீங்க… உயிருக்குப் போராடிய ஒரு வயதுக் குழந்தை… வைரலாகும் பகீர் வீடியோ..!!

Spread the love

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களாக கார் சாவிகளைக் கொடுப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. தீபாலி தோஷி என்ற பெண், தனது ஒரு வயதுக் குழந்தையுடன் காரில் இருந்தபோது, கவனக்குறைவாக கார் சாவியை அந்தக் குழந்தையிடம் கொடுத்துள்ளார். எதிர்பாராத விதமாக, குழந்தை காரின் உட்புறமாகத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டது. கதவு மூடப்பட்டிருந்ததால் வெளியிலிருந்து எவ்வளவோ முயன்றும் கதவைத் திறக்க முடியவில்லை. குழந்தை உள்ளே இருப்பதைப் பார்த்து குடும்பத்தினர் பெரும் பதற்றமடைந்தனர்.

கண்ணாடி மூடப்பட்டிருந்ததால் உள்ளே இருப்பவர்களுக்கு வெளியே பேசுவது கேட்கவில்லை. குழந்தைக்கு இது ஒரு விளையாட்டு போலத் தோன்றியதால், வெளியே இருப்பவர்கள் சைகை காட்டியும் குழந்தையினால் கதவைத் திறக்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக, தீபாலியிடம் காரின் மாற்றுச் சாவி (Spare Key) இருந்தது. அலுவலகத்தில் இருந்த அந்தச் சாவியை உடனடியாக வரவழைத்து, அதன் மூலம் காரைத் திறந்து குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். ஒருவேளை மாற்றுச் சாவி இல்லையென்றால், கண்ணாடியை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் என்று அந்தத் தாய் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தீபாலி, “இது எனக்குக் கிடைத்த ஒரு பயங்கரமான பாடம்” என்று குறிப்பிட்டுள்ளார். கார் சாவியை ஒருபோதும் குழந்தைகளிடம் விளையாடக் கொடுக்காதீர்கள் என்றும், எப்போதும் ஒரு மாற்றுச் சாவியைத் தயாராக வைத்திருங்கள் என்றும் அவர் மற்ற பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் பலரும் இந்தக் குழந்தையின் பாதுகாப்பைக் கண்டு கவலை தெரிவித்ததுடன், பெற்றோர்களின் விழிப்புணர்வு எவ்வளவு முக்கியம் என்பதையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

8 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

9 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

9 மணத்தியாலங்கள் ago