விபத்தில் சிக்கினால் 1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை…!! ஆவணம் தேவையில்லை… பலரும் அறியாத மத்திய அரசின் திட்டம்…!!

Spread the love

சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு ‘பி.எம். ரஹத்’ (PM RAHAT) என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் விபத்து நடந்த இடத்தைப் பொருட்படுத்தாமல், காயமடைந்தவர்களுக்கு எந்தவிதமான முன்கூட்டிய கட்டணமும் இன்றி ரொக்கமில்லா சிகிச்சை  வழங்கப்படும்.

விபத்து நிகழ்ந்த முதல் ஏழு நாட்களுக்கு அல்லது அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரையிலான சிகிச்சைச் செலவுகளை மத்திய அரசே முழுமையாக ஏற்கும். வருமானச் சான்று அல்லது இதர ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தைப் பயன்படுத்தி உயிரைக் காக்க முடியும்.

இந்தத் திட்டமானது ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் விபத்துக்குப் பிந்தைய முதல் சில மணிநேரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய அவசர எண்ணான 112 உடன் இது இணைக்கப்பட்டுள்ளதால், அழைப்பு விடுத்த உடனேயே ஆம்புலன்ஸ் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளை அதிகாரிகள் ஒருங்கிணைத்துவிடுவர்.

மருத்துவமனை நிர்வாகம் தனது செலவீனங்களை காப்பீட்டு நிறுவனம் அல்லது விபத்து நிதியிலிருந்து டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்ளலாம்; ஒருவேளை காப்பீடு இல்லையெனில், அரசே அந்தப் பணத்தை வழங்கும். இத்திட்டம் ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடின்றி விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் பொதுவானது என்பதால், இனி விபத்து சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நிலை மாற வாய்ப்புள்ளது.

Devi Ramu

Recent Posts

சபாநாயகர் அறைக்கு விரைந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி…. சிக்கிய 6 பேர்… எடப்பாடியின் அடுத்த கணக்கு…. திடீர் திருப்பம்…..!

ராஜினாமா செய்த அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் தொடர்பாக, பேரவைச் சபாநாயகர் J.C.D.…

3 minutes ago

என் தங்கையைத் தொட உனக்கு எங்குடா தைரியம்?… தங்கையைக் காப்பாற்ற உயிரைப் பிடித்துப் போராடிய சிறுமி… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!

வீரமும் உறுதியும் ஒரு பெண்ணின் அடையாளமாக மாறும் போது, சரித்திரம் தலைவணங்குகிறது. ஜான்சியின் ராணி லட்சுமிபாய் ஆங்கிலேயப் பேரரசை எதிர்கொள்ளும்போது…

14 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… ஒரு நொடியில் பறிபோன பிஞ்சு உயிர்… கதறும் குடும்பம்… டிராக்டர் திரும்பிய போது கோர விபத்து… குலை நடுநவைக்கும் பகீர் சம்பவம்…!

சாலைகளில் நடக்கும் இதுபோன்ற விபத்துகள் நெஞ்சைப் பிளக்கும் வேதனையைத் தருகின்றன. குறிப்பாக, சிறிய தவறுகளும் கவனக்குறைவும் ஒரு நொடியில் ஈடுசெய்ய…

22 minutes ago

திக்… திக் நிமிடங்கள்… ஓய்வூதியப் பணத்துக்காக மூதாட்டியைத்… தரையில் தள்ளித் தாக்கிய சிறுவன்… மகாராஷ்டிராவில் நெஞ்சை நடுங்கும் கொடூரம்…!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில், முதியவர் ஒருவரிடம் சிறுவன் ஒருவன் கொடூரமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

34 minutes ago

யோவ்… டூவீலருல போனா ஃபைன் போடுவாங்கடா… இது என்ன கார் டயரையே தூக்கிட்டு போற?… சிசிடிவியில் சிக்கிய மாஸ் திருடன்…!

சந்திராயன்குட்டா பகுதியில் கார் ஸ்பேர் டயரை இருசக்கர வாகனத்தில் திருடிச் சென்ற நபரை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. சனிக்கிழமை (அக்டோபர்…

39 minutes ago

“அடிக்க அடிக்க உயர்வோம்”… அன்பில் மகேஷ் கைதால் கொதித்த சேகர்பாபு… சென்னையில் பரபரப்பு பேட்டி….!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, திமுக-வை நோக்கி இதுபோன்று ஆயிரக்கணக்கான…

9 மணத்தியாலங்கள் ago