“கள்ள உறவு தான் காரணமா…?” எஸ்.ஐ மனைவி தற்கொலை விவகாரம்…! “கொன்னுட்டாங்க சார்…” தந்தையின் பரபரப்பு புகார்…!!

Spread the love

விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த எஸ்.ஐ. அருண்குமார் (30) என்பவருக்கும், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த இளவரசி (25) என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று, சாத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் அருண்குமார் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, மனைவி இளவரசி தூக்கில் சடலமாகத் தொங்கியது தெரியவந்தது. அவரது உடலை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனர்.

இளவரசியின் தந்தை கருப்பசாமி அளித்த புகாரில், திருமணத்தின்போது 81 பவுன் நகை, கார் வாங்க ரூ.5 லட்சம் கொடுத்ததாகவும், அதன் பின்னரும் கூடுதல் வரதட்சணை கேட்டு அருண்குமார் தன் மகளைத் துன்புறுத்தியதாக  தெரிவித்துள்ளார். மேலும், அருண்குமாருக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதைக் கண்டித்ததால் அவர் தனது மகளை அடித்துக் கொலை செய்துவிட்டார் என்றும் தனது புகாரில் கூறியிருந்தார். இறப்பில் மர்மம் இருப்பதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த இளவரசியின் உறவினர்கள், எஸ்.ஐ. அருண்குமாரைக் கைது செய்யக் கோரி விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சமாதானப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர்.

Devi Ramu

Recent Posts

ரோட்டில் நடக்கும் போது உஷார்… மின்னல் வேகத்தில் வந்த கார்… நொடியில் மாறிய இளைஞரின் தலைவிதி… இணையத்தை அதிரவைக்கும் CCTV காட்சி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…

23 minutes ago

இனி இதுதான் கதியா?… வெறிச்சோடி கிடந்த கவுண்டர்கள்… SBI கிளையில் காத்திருந்து நொந்துபோன மக்கள்… வாக்குவாதத்தால் பரபரப்பு…!!

வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…

27 minutes ago

காரணம் தெரிந்தால் ஷாக் ஆவீங்க!… இப்படியும் ஒரு காதலா?… நடுரோட்டில் காதலனுக்கு தண்ணி காட்டிய இளம்பெண்… ஸ்தம்பித்த நெடுஞ்சாலை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…

34 minutes ago

ரகசிய டீ பார்ட்டி… போட்டுக் கொடுத்த மர்ம நபர்… உணவகத்திற்குள் புயலென நுழைந்த மனைவி… கணவனுக்கும் தோழிக்கும் விழுந்த சரமாரி அடி…!!

சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…

39 minutes ago

இதயம் இன்னும் படபடக்குது… இருளில் நேரில் கண்ட திகில் காட்சி… ஆன்மாவையே நடுங்க வைத்த அந்த ஒரு நொடி… தீபாவளி அமாவாசை இரவில் நடந்தது என்ன?…!!

தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…

46 minutes ago

இப்படியொரு துணிச்சலா?… வாகனத்திலிருந்து பையை அபேஸ் செய்த மர்ம நபர்… சிக்கன் கடை வாசலில் நடந்த பகீர் சம்பவம்…!!

சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…

51 minutes ago