நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஃபாரூக், இவர் நான்கு சக்கர பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கடையில் இருப்பது வழக்கம். இரவு 10.30 மணிக்கு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விடுவார். நேற்று இரவு கடையை மூடுவதற்காக தயாராகிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரான ஆனந்த் என்பவர் காரை பழுது பார்ப்பதற்காக எடுத்து வந்துள்ளார். கடை மூடும் நேரம் என்பதால் இப்பொழுது பார்க்க முடியாது நாளை வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஆசிரியர் காரில் வைத்திருந்த அரிவாளை எடுத்து ஃபாரூக்கை தாக்குவதற்கு கடைக்குள் சென்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த ஃபாரூக் காரைச் சுற்றி சுற்றி ஓடிவுள்ளார். பின்பு தப்பித்து வெளியே ஓடிச் சென்று ஃபாரூக்கை துரத்திக் கொண்டே தாக்கியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஃபாரூக்கை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் ஆசிரியர் ஆனந்தை தேடி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்கனவே இருந்து வந்துள்ளதாகவும். பின்பு காரை பழுது பார்க்க முடியாது என்று மறுத்ததால் சம்பவம் நடந்துள்ளதா, இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…
நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…
சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…