திருச்சுழி தொகுதியில் திடீர் திருப்பம்… மேடையிலேயே ராஜவர்மன் பேச்சால் ஆடிப்போன அதிமுக தொண்டர்கள்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

Spread the love

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜவர்மன், தான் அந்தத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமியின் கட்டளைப்படியே அங்கு களம் இறங்கியுள்ளதாகவும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சாத்தூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு, அங்கு நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதால், ராஜவர்மன் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், காரியாபட்டியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “திருச்சுழி தொகுதியில் போட்டியிட நான் சீட் கேட்கவே இல்லை, எடப்பாடியார் தான் என்னை இங்கு அனுப்பி வைத்தார்” என்று மேடையிலேயே போட்டுடைத்தார்.

இதனால் சாத்தூரில் அசுர பலம் கொண்ட ராஜவர்மன் தனித்து நின்றால் அது கூட்டணியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதிமுக மற்றும் பாஜக மேலிடம் அவரைச் சமாதானம் செய்து திருச்சுழியில் போட்டியிட சம்மதிக்க வைத்ததாகத் தெரிகிறது.

தனது உரையில், தான் ஏற்கனவே சாத்தூர் எம்எல்ஏவாக இருந்த அனுபவம் கொண்டவன் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரை வெற்றி பெறச் செய்தது போல திருச்சுழியிலும் உழைப்பேன் என்றும் அவர் உறுதி அளித்தார். அதே சமயம், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்குப் போடப்படும் வாக்குகள் செல்லாத வாக்குகள் என்றும், தான் வெற்றி பெற்றால் மக்களுக்காகப் பாடுபடுவேன் என்றும் அவர் அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

Rajeshwari

Recent Posts

“என்றென்றும் நீங்களே எங்கள் முதல்வர்!”… கொளத்தூர் மக்களின் சர்ப்ரைஸ் வரவேற்பு.. கண்கலங்கிய மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…

4 minutes ago

பெங்களூருவில் பயங்கரம்..! 2.5 வயது மகனை 5 லட்சத்திற்கு விற்ற தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த துரோகம்…!!

பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…

4 minutes ago

“பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம்” தாகத்தைத் தீர்க்க பல கோடி செலவில் ஹெலிகாப்டர்.. பனிப்பாறைத் தண்ணீரைக் குடிக்கப் பறந்த கோடீஸ்வரரின் மகள்… கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…

11 minutes ago

“ஆட்சியை கலைப்பாரா ஆளுநர்?”… சட்டசபையில் மெஜாரிட்டி இல்லைனா என்ன நடக்கும்?… விஜய் அரசுக்கு வந்த சோதனை.. சட்ட வல்லுநர்கள் சொல்லும் ரகசியம்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் விஜய்யின் தமிழக…

14 minutes ago

“உன் புருஷன் எனக்கு.. என் புருஷன் உனக்கு!”.. நீதிமன்றத்தையே அதிர வைத்த சகோதரிகளின் வினோத ஒப்பந்தம்… ஸ்தம்பித்த நீதிபதிகள்… வைரலாகும் குவாலியர் சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…

24 minutes ago

பதறவைக்கும் கொடுமை..! 12 வயது சிறுமிக்கு வளைகாப்பு… “உயிருக்கே ஆபத்து” இணையத்தை உலுக்கும் புகைப்படங்களால் கொந்தளிக்கும் மக்கள்..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு 12 வயது சிறுமிக்கு வளைகாப்பு (Baby Shower) நடத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும்…

27 minutes ago