மத்தியப்பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரங்கேறியுள்ள முறைகேடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வைரலாகி வரும் வீடியோக்களில், பைராட் பகுதியில் உள்ள தேர்வு மையங்களின் கூரைகள் மீது ஏறி சில இளைஞர்கள் மாணவர்களுக்கு பிட் பேப்பர்களை வழங்குவதும், ஜன்னல் வழியாக விடைகளை உரக்கக் கத்திச் சொல்வதும் பதிவாகியுள்ளன.
இந்தச் சம்பவங்கள் மாநிலத்தின் கல்வித் தரம் மற்றும் தேர்வுக்கால பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளன. மற்றொரு அதிர்ச்சிகரமான புகாராக, ஒரு மாணவிக்கு பதிலாக வேறொருவர் தேர்வு எழுதச் சென்ற ஆள்மாறாட்டச் சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
“>
இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோக்கள் குறித்து தங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் கல்வித் துறை உறுதி அளித்துள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…