நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா ஆகியோருக்கிடையே நடைபெற்று வரும் சொத்து விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ‘ஏஆர்எஸ் கார்டன்’ என்னும் ஸ்டுடியோவை, சகோதரிகள் இருவரும் தங்களது தாயார் சரசம்மாவின் பெயரையும் இணைத்து மூன்று சம பங்குகளாகப் பதிவு செய்து ஆரம்ப காலத்தில் வாங்கினர். அன்று சில லட்சங்களுக்கு வாங்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ஆயிரம் கோடியை நெருங்கும் நிலையில், தாயார் காலமான பிறகு அவரது பங்கு மற்ற சட்டபூர்வ வாரிசுகளுக்குப் பிரிக்கப்படாமல் முழு சொத்துக்கும் ராதா உரிமை கோருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சொத்தில் அம்பிகாவிற்குச் சேர வேண்டிய சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கை பணமாகவோ அல்லது வேறு வகையிலோ ஈடுசெய்வதற்கு ராதா தரப்பில் ஒப்பந்தம் பேசப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இதன் அடிப்படையில் அம்பிகாவிற்கு வழங்கப்பட்ட 46 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வங்கியில் போதிய இருப்பு இல்லாமல் பவுன்ஸ் ஆகியுள்ளன. ஆனால், இது தொடர்பாக அம்பிகா சட்டப்படி நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பாகவே, தனது காசோலைகளை அவர் திருடிவிட்டதாக ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல ஆண்டுகளாகவே இருவருக்கும் இடையே மனக்கசப்பு உள்ள நிலையில், ராதா கையெழுத்திட்ட செக்குகளை அலட்சியமாக அம்பிகா வீட்டில் விட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள காசோலைகளின் கூட்டுத் தொகையில் உள்ள முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டி ராதாவின் குற்றச்சாட்டை பாலாஜி பிரபு விமர்சித்துள்ளார்.
தனக்கே தெரியாமல் சொத்து ஆவணங்களில் இருந்து தனது பெயரை நீக்கியுள்ளதாகவும், தான் உண்மைகளைப் பேசினால் ராதா சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் அம்பிகா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது ஒரு கிரிமினல் புகாராக அளிக்கப்பட்டிருந்தாலும், காவல்துறையினர் இரு தரப்பிலும் தீர விசாரணை நடத்தினால் இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப சிவில் சொத்துப் பிரச்சினை என்பது தெளிவாகிவிடும். அவ்வாறு இது நீதிமன்ற விசாரணைக்கு மாற்றப்பட்டால், பல ஆண்டுகளுக்கு இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு ‘ஏஆர்எஸ் கார்டன்’ என்ற அந்தப் பெரிய சொத்து எதற்கும் பயன்படாமல் முடங்கிப்போகும் அபாயம் உள்ளது என்றும் பாலாஜி பிரபு தனது பேட்டியில் கணித்துள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…