Categories: சினிமா

தற்கொலை செய்துகொண்ட ‘மதகஜராஜா’ பட தயாரிப்பாளர்.. 12 வருடம் கழித்து வெளியாவதின் பின்னணி..!

Spread the love

விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் உருவான திரைப்படம் மதகஜராஜா. 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டாலும் சில பிரச்சனைகள் காரணமாக வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த திரைப்படத்தை தயாரித்தது ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டிங். இந்த நிறுவனம் தொடர்ந்து கடன் பிரச்சினைகளால் இப்ப படத்தை வெளியிடாமல் இருந்து வந்தது. விஷாலும் இந்த படத்தை வெளியிடுவதற்கு பல முயற்சிகளை செய்து கடைசியில் கைவிட்டு விட்டார். திரைப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனு சூட், அஞ்சலி மற்றும் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மயில்சாமி, மனோபாலா மற்றும் சிட்டிபாபு என பலரும் நடித்திருந்தனர்.

ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலிலும், சதா ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார். மதகஜராஜாவை சுருக்கமாக எம்ஜிஆர் என்று அழைத்து வந்தனர். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் எப்போது வரும் அப்போது வரும் என்று தகவல் மட்டுமே வெளியாகிக் கொண்டிருந்தது. ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்த இந்த படம் 2013 ஆம் வருடம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல பொருளாதார சிக்கலால் வெளியாகவில்லை.

#image_title

ஒரு கட்டத்தில் இந்த படத்தையே ரசிகர்கள் மறந்து போன நிலையில் தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த படத்தின் வெளியீட்டு தேதி சாத்தியமாகியுள்ளது. அதாவது இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  இந்நிலையில்   இந்த படத்தின் தயாரிப்பாளரும், ஹோட்டல் அதிபருமான ஏ ரவிசங்கர் பிரசாத் தற்கொலை செய்து கொண்டார்.  இதனால் இந்த படத்தின் வெளியிட்டுக்கு சுமார் 15 முதல் 16 கோடி வரை தேவை என்ற நிலை. அப்போது இது மிகப்பெரும் தொகை.

இப்போது இந்த படத்தை வெளியிடும் பொறுப்பை திருப்பூர் சுப்ரமணியம் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் பொறுப்பு எடுத்து யார் யாருக்கு பணம் கொடுக்க வேண்டுமோ அவர்களை எல்லாம் தொடர்பு கொண்டு பேசி வருகிறாராம். கொடுக்க வேண்டிய தொகையில் பாதியை பெற்றுக்கொண்டு ஒப்புதல் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம். சம்மதம் சொல்லி இருப்பதால் இப்போது சுமார் ஏழு கோடி இருந்தால் படத்தை வெளியிட்டு விடலாம் என்ற நிலை . கடந்த சில வாரங்களாகவே இதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

Soundarya

Recent Posts

அதிர்ஷ்ட கதவு திறந்தது!… உச்ச வீட்டில் சூரிய பகவான்… அடுத்த 30 நாட்களுக்கு இந்த 6 ராசிகளுக்கு பணமழை பொழியப்போகுது… உங்கள் ராசி இருக்கா?

சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…

1 minute ago

“டாடா, பிர்லா முதல் ஸ்டார்ட்அப் வரை”… இந்திய கார்ப்பரேட் உலகில் நடக்கப்போகும் அந்தப் பெரிய மாற்றம்…. ஊழியர்களுக்காகத் தேடி வந்த குட் நியூஸ்….!

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'Happiest Places to Work' விருதுகள், வெறும் லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு ஒரு…

2 minutes ago

மாலை 3 மணிக்கு அதிரப்போகும் தமிழக அரசியல்… விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’ வெளியாகிறது… 3 PM-க்கு லைவ் மிஸ் பண்ணாதீங்க….!

தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…

8 minutes ago

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

11 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

11 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago