சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் திருமணமான பெண் காவலர் ஒருவருக்கு, மானாமதுரை அருகே உள்ள தூதை கிராமத்தைச் சேர்ந்த ராபின் (28) என்ற லாரி ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராபின் அந்த பெண் காவலரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவசரமாக சந்திக்க வேண்டும் என அழைத்துள்ளார். நண்பன்தானே என்ற நம்பிக்கையில் அந்த பெண் காவலரும் சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அவரைச் சந்திக்கச் சென்றுள்ளார்.
அப்போது ராபின், பெண் காவலரை ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள ஒரு புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று அவரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் அவரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, அங்கு ராபினின் நண்பர்களான சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த மகாராஜா (29) மற்றும் ஹரிஸ் (21) ஆகிய இருவரும் வந்துள்ளனர். பின்னர், அவர்கள் மூவரும் சேர்ந்து பெண் காவலரிடம் கூட்டுப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து ஒருவழியாகத் தப்பித்த பெண் காவலர், அருகில் இருந்த வீடுகளுக்குச் சென்று உதவி கோரியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களின் உதவியுடன் காவல்துறை அவசர உதவி எண் 100-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண் காவலரை பாதுகாப்பாக மீட்டதுடன், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அவரது உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் அமல அட்வின் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
தனிப்படையினரின் முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் லாரி ஓட்டுநர் ராபின், அவரது நண்பர் மகாராஜா மற்றும் கல்லூரி மாணவரான ஹரிஸ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் அதிரடியாகப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவர்கள் மூவர் மீதும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முறைப்படி கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுமக்களுக்குச் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஒரு பெண் காவலருக்கே இப்படி ஒரு கொடூரம் நேர்ந்திருப்பது சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கஸ்தூரி, கணவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து…
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள…
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…