பகீர்… உன் பொண்டாட்டி சரி இல்லடா?… இன்ஸ்டா காதலிக்காக உயிரை எடுத்த நண்பன்… 17 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… கல்லறையில் கிடந்த சடலம்… நடுங்க வைக்கும் பின்னணி…!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சானாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞரான ரஞ்சன், பிளஸ் 2 முடித்து கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார். சமீபத்தில் தொழிற்சாலை ஒன்றில் நடைபெற்ற இரும்புப் பொருட்கள் திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து நண்பர்களுடன் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மறுநாள் ஊருக்கு வெளியே உள்ள கல்லறை பகுதியில் ரத்தக்காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பாதிரிவேடு போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அதே கிராமத்தைச் சேர்ந்த காமேஷ் என்பவரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட காமேஷின் மனைவியின் நடத்தை குறித்து, இருவரும் ஒன்றாக மது அருந்தியபோது ரஞ்சன் அவதூறாகப் பேசியது தெரியவந்தது.

மனைவியைப் பற்றித் தவறாகப் பேசக் கூடாது என எச்சரித்தும் போதையில் ரஞ்சன் தொடர்ந்து தரக்குறைவாகப் பேசியதால் ஆத்திரமடைந்த காமேஷ், ரஞ்சன் ஏற்கெனவே தன்னிடம் கொடுத்து வைத்திருந்த கத்தியை வைத்தே அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். நண்பனின் மனைவியைப் பற்றி அவதூறாகப் பேசியதால் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

” அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு அராஜகம்…” திருப்பணிகளை செய்தது திமுக அரசுதான்… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்…!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…

2 minutes ago

“10 நிமிஷத்துல உள்ள விடலைனா கேட்டை உடைப்போம்…” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…

20 minutes ago

“உள்ளே வராதீங்க… என்ன செஞ்சீங்க..?” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு…! பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு…!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…

29 minutes ago