இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவனுக்கு அண்மையில் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து அவர் இந்த உயரிய விருதைப் பெற்றார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் மாதவனுடன் அவரது மனைவி சரிதா மற்றும் மகன் வேதாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விருது வழங்கும் விழாவில் மாதவன் அணிந்திருந்த ஆடைக்கு இணையாக, அவர் கையில் கட்டியிருந்த கடிகாரமும் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் அணிந்திருந்தது இந்திய நிறுவனமான டைட்டன் தயாரித்த மிக அரிதான சொகுசு கடிகாரமாகும். 18 கேரட் ரோஸ் கோல்டு உறை கொண்ட இந்த கடிகாரத்தின் மதிப்பு சுமார் 40 லட்ச ரூபாய் என்று கூறப்படுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான ‘ஹவா மஹால்’ கோட்டையினால் ஈர்க்கப்பட்டு, ராஜஸ்தானின் பாரம்பரிய நுண்கலை ஓவிய பாணியில் இதன் முகப்பு பளிங்கு கல்லில் கைகளால் வரையப்பட்டுள்ளது. மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த ஓவியத்தை வரைந்தவர் பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞர் எஸ். ஷாகிர் அலி ஆவார். உலகிலேயே வெறும் 10 கடிகாரங்கள் மட்டுமே இந்த மாடலில் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது இதன் தனிச்சிறப்பாகும்.
மத்தியப் பிரதேசத்தில் வாடிக்கையாளர்கள் போல வேடமிட்டு நகைக்கடைக்குள் புகுந்த மூன்று பெண்கள், சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை…
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.100 கோடி அளவில் மாபெரும் மோசடி நடந்ததாக எழுந்துள்ள புகாரில், தலைமறைவாக இருந்த முன்னாள்…
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞருக்கும், கால்டுவெல் காலனியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மனைவிக்கும் பள்ளிப் பருவத்திலிருந்தே…
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி', கார்த்தியின் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற பிரபல…
சென்னை எண்ணூர் பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
டெல்லி அருகே உள்ள வசுந்தராவில் வசித்து வந்த ஷஷாங்க் - பிரியா தம்பதியினர் தனியார் நிறுவனங்களில் கணக்காளர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.…