தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுக பல வியூகங்களை வகுத்து வரும் நிலையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். அதன்படி NDA கூட்டணியில் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கூறி வருகிறார்கள் . தற்போது அவர்கள் இருவருமே பாஜகவுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வரும் நிலையில் கூட்டணி குறித்து அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் ஆண்டிப்பட்டி தொகுதியில் தான் நிச்சயம் போட்டியிடுவேன். சீட் கொடுத்தால் கூட்டணி, இல்லையென்றால் தனியாகத்தான் நிற்பேன் என்று கூறியுள்ளார். ஆண்டிப்பட்டியை ரிசர்வ் செய்து தினகரன் களமிறங்கி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பு கிளப்பியுள்ளது. மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக எத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டதா? தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளும் கூட்டணியை உருவாக்க முயற்சிக்கும் கட்சிகளும் எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது உண்மைதான்.
நண்பர் அண்ணாமலை எங்களை தொலைபேசியிலும் நேரிலும் சந்திக்கும்போதெல்லாம் NDA கூட்டணிக்கு மீண்டும் வரவேண்டும் என்று தான் சொல்கின்றார். ஆனால் அது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆண்டிபட்டி தொகுதியை நமக்கு அளித்தால் மட்டுமே கூட்டணி. இல்லையென்றால் தனியாக கூட ஆண்டிப்பட்டி தொகுதியில் நிற்பேன். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தால் நானே அறிவிப்பேன். எங்களின் தகுதியான வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கின்ற கூட்டணிக்கு தான் நாங்கள் செல்ல இருக்கின்றோம். ஜனவரி மாதம் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிப்போம் என்ற தினகரன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…