பனையூர் பண்ணையாரே..! “அன்று 5 மணி நேரம்” ஜெ., முன் கைகட்டி நின்றது மறந்துபோச்சா..? விஜயை கடுமையாக சாடிய அதிமுக..!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவை “ஊழல் சக்தி” என்று விமர்சித்ததைத் தொடர்ந்து, அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) நேற்று (ஜனவரி 25, 2026) அவருக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. ஊழல் என்பது சட்டவிரோதமாகப் பணம் சம்பாதிப்பது என்றால், தனது திரைப்படங்களுக்குத் தொடர்ந்து பிளாக்கில்  டிக்கெட் விற்று கோடிக்கணக்கில் லாபம் பார்த்த விஜய்தான் “ஆகப்பெரும் ஊழல்வாதி” என்று அதிமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.

தனது திரைப்படங்கள் (குறிப்பாக ‘தலைவா’) வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது, அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டின் முன் ஐந்து மணி நேரம் கைகட்டி நின்றதை அதிமுக நினைவுபடுத்தியுள்ளது. வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுபவர் கொள்கை பற்றிப் பேசக்கூடாது என்று அக்கட்சி சாடியுள்ளது. கரூரில் தனது பேரணியின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், நேரில் சென்று ஆறுதல் கூறாமல் தனது பிம்பத்தை மட்டுமே முன்னிறுத்துவது ஆபத்தான “தற்பெருமை அரசியல்” என்று அதிமுக விமர்சித்துள்ளது. ஊழலுக்கு எதிரானவர் என்று தன்னைக்காட்டிக் கொள்ளும் விஜய், அதிமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் தனது மேடையிலேயே அமர வைத்திருப்பது எத்தகைய தூய அரசியல் என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

Soundarya

Recent Posts

50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து… தலைக்குப்புற கவிழ்ந்து 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

12 minutes ago

பொம்மையை தாயாக நினைத்து வளர்ந்த குரங்கு… இன்று மற்ற குட்டிகளுக்கு பாதுகாவலனாக மாறிய அதிசயம்… கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

ஜப்பான் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், பிறந்ததும் தாயால் கைவிடப்பட்டுத் தனிமையிலும் மற்ற குரங்குகளின் தாக்குதலிலும் தவித்து வந்த…

19 minutes ago

கார் கண்ணாடியை துளைத்த தோட்டாக்கள்…! நூலிழையில் உயிர் தப்பிய தந்தை மற்றும் 1 வயது மகள்… 3 கி.மீ துரத்தி சென்ற கும்பல்… பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…

45 minutes ago

போனட்டில் தொங்கியபடி அலறிய காவலர்… காரில் 200 மீட்டர் இழுத்து சென்ற பயங்கரம்… மும்பையில் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…

1 மணத்தியாலம் ago

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

2 மணத்தியாலங்கள் ago