தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்நிலைக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தவெக-விற்குத் தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில், தொண்டர்கள் பொதுமக்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து பேசினார். அதில், தவெக-விற்கு விசில் சின்னம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அந்த விசிலை எப்போது, எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதில் தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும். தூங்குபவர்களின் காதிற்கு அருகில் சென்று விசில் அடித்து அவர்களை எழுப்பாதீர்கள்.
அது மக்களுக்கு எரிச்சலூட்டும். மாறாக, நம்முடைய கொள்கைகளை மக்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். கட்சித் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காமல், கண்ணியமான முறையில் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதையே அவர் இந்த உதாரணத்தின் மூலம் வலியுறுத்தினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றும், விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்,
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…