“திமுகவுக்கு எண்ட் கார்டு போடும் 3 தொகுதிகள்?”… அமைச்சர்களுக்கு வந்த சீக்ரெட் ரிப்போர்ட் … தேர்தல் களத்தில் அதிரடி திருப்பம்…!!!

Spread the love

2021 சட்டசபைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளையும் திமுக கூட்டணி முழுமையாகக் கைப்பற்றியிருந்தாலும், வரவிருக்கும் தேர்தலில் ஸ்ரீரங்கம், மணப்பாறை மற்றும் லால்குடி ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக கடும் சவாலை அளித்து வருகிறது. மணப்பாறையில் மனிதநேய மக்கள் கட்சியின் அப்துல் சமாத் மீண்டும் களம் காண்பதும், ஸ்ரீரங்கத்தில் பழனியாண்டிக்கு மாற்றாக துரைராஜ் நிறுத்தப்பட்டுள்ளதும் கள நிலவரத்தை மாற்றியுள்ளன. குறிப்பாக லால்குடியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ், உடையார் சமூகத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க வேட்பாளராக இருப்பதால், அவருக்குக் கிடைக்கும் பிரம்மாண்ட வரவேற்பு திமுக வேட்பாளர் பாரிவள்ளலுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இந்தத் தொகுதிகளில் நிலவும் கடும் போட்டிக்கு மத்தியில், சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் சில திமுக நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பது கட்சிக்குச் பின்னடைவாகக் கருதப்படுகிறது. லீமா ரோஸ் போன்ற பலமான வேட்பாளர்களை எதிர்கொள்ள ஆளுங்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் முழுமையாக ஒருங்கிணைக்கப்படாதது தலைமைக்குத் தெரியவந்துள்ளது. இதனால் லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினரின் சுறுசுறுப்பான களப்பணி திமுகவினரைச் சற்று திகைக்க வைத்துள்ளது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த திமுக தலைமை, மாவட்டத்தின் முக்கியப் புள்ளிகளான அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரை அழைத்து உடனடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு தொகுதி குறைந்தால் கூட அது அமைச்சர்களின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தவும், தேர்தல் பணிகளை முடுக்கிவிடவும் மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் இருவரும் தத்தமது ஆதரவாளர்கள் மற்றும் கீழ்மட்ட நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர்களின் நேரடித் தலையீட்டைத் தொடர்ந்து, கட்சிப் பணிகளில் தொய்வு காட்டும் நிர்வாகிகளுக்குக் கடும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் செல்வாக்கு குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, நிலைமையைச் சரிசெய்யும் பணிகளில் திமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த டெல்டா மண்டலத்திலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்ய உயர்மட்ட நிர்வாகிகள் தற்போது களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Muthu Mani

Recent Posts

“மாமா இறந்துட்டாரு”…. மனைவியின் கண்ணீர் நாடகம்…. படுக்கையில் கிடந்த கணவன்… சீக்ரெட் போன் உடைத்த பகீர் உண்மை….. திறந்து பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!

ஆரம்பத்தில் இயற்கை மரணம் என்று கருதப்பட்ட ஒரு சம்பவம், மறைக்கப்பட்டிருந்த செல்போன் கிடைத்ததைத் தொடர்ந்து திட்டமிட்ட கொலையாக உருவெடுத்துள்ள சம்பவம்…

2 minutes ago

“தூய்மையாக்கப் போகிறேன்!”… புனிதச் சடங்கா? வக்கிர வெறியா?… ஈவுஇரக்கமற்ற செயல்… மனைவிக்கு கூட்டு வன்கொடுமை… ‘புனிதம்’ என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!

குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ள நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு கொடூர சம்பவத்தில், கணவனே தனது மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும், கடுமையான…

3 minutes ago

“மது வேணும்னு கேட்டது குத்தமா?”…. அக்கா கொடுத்த அந்த ஒரு ஐடியா…. மனைவியை கொன்றுவிட்டு போதையில் பக்கத்திலேயே தூங்கிய கணவன்…. பெருங்குடியில் நடந்த கொடூரம்….!

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அம்பேத்கர் புரட்சி நகரைச் சேர்ந்த 35 வயதுடைய லோகநாதன் என்பவர், ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ‘செப்டோ’வில்…

9 minutes ago

யூசர்களே அலெர்ட்..! இனி கவலையே வேண்டாம்… வந்துடுச்சு புது ட்ரிக்… இனி உங்க ரகசிய சாட் 100% சேஃப்… வாட்ஸ்அப்பின் அதிரடி அப்டேட்…!!

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் 'ரெஸ்ட்ரிக்டட் சாட்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.…

14 minutes ago

தவெக-வில் விழுந்த முதல் விக்கெட்…. 3 அமைச்சர்களின் பதவி காலி… CM விஜய்யின் ஆட்டம் ஆரம்பம்…. பனையூர் வட்டாரத்தில் வெளியான வெடி குண்டு தகவல்…!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல்…

15 minutes ago

“ஒழுங்கா இல்லன்னா கொன்னுடுவேன்”…. மயிலாப்பூரில் நடுரோட்டில் அரங்கேறிய விபரீதம்…. 21 வயது ஏசி மெக்கானிக் படுகொலை… பின்னணியில் அதிர்ச்சி காரணம்….!

சென்னை மயிலாப்பூரில் நண்பர்களைச் சந்திக்க வந்த 21 வயது ஏசி மெக்கானிக் மர்மக் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…

24 minutes ago