“இப்ப குடுப்பாங்க அப்ப குடுப்பாங்க…” கடுப்பான சி.ஆர்.சுந்தர்ராஜன்… அதிரடி முடிவு… கோடிகளில் செலவு, மேடை ரெடி… தவெக இணைப்பு விழா திடீர் ரத்து…பரபரப்பு பின்னணி…!

Spread the love

சிவகங்கையில் முன்னாள் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும், கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளருமாக அறியப்பட்ட சி.ஆர்.சுந்தர்ராஜன், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தவெக தன்னை இணைத்துக் கொள்ள முடிவு செய்தார். இதற்காக சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டியில் சுமார் 10 ஆயிரம் பேரை ஒன்றிணைக்கும் பிரம்மாண்டமான விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனக்கு சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்த அவர், எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் காங்கிரஸிலிருந்து வெளியேறி தவெகவில் தஞ்சம் புக திட்டமிட்டார்.

இந்த இணைப்பு விழாவைச் சிறப்பாக நடத்துவதற்காகப் பல லட்சம் ரூபாய் மற்றும் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு பிரம்மாண்டமான மேடைகளும் அமைக்கப்பட்டன. முதலில் ஜூலை 19-ஆம் தேதியன்று இந்த விழா நடத்தப்படும் என்று திட்டமிடப்பட்டு, தவெக அமைச்சர் ஆனந்தின் சம்மதமும் பெறப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஜூலை 19-ஆம் தேதி விழா நடைபெறாமல் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, விழாவுக்கான புதிய தேதியை ஒதுக்க அமைச்சர் ஆனந்த் இதுவரை ஒப்புதல் அளிக்காததால், சி.ஆர்.சுந்தர்ராஜன் செய்வதறியாது தவித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், கூட்டணிக் கட்சிகளிலிருந்து வரும் நிர்வாகிகளைத் திமுக சேர்க்காமல் இருக்க வேண்டும் என்றும், திமுக இதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் சமீபத்தில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால், தவெகவில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட இணைப்பு விழாவுக்குக் காங்கிரஸ் தரப்பிலிருந்தோ அல்லது கார்த்தி சிதம்பரம் மற்றும் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தரப்பிலிருந்தோ முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் அரசியல் களத்தில் எழுந்துள்ளது. பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்தும் விழா தள்ளிப்போனது சிவகங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Visaka

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

3 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

4 மணத்தியாலங்கள் ago