தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ‘திராவிட மாடல் 2.O’ ஆட்சியை அமைக்கலாம் என்று திமுக தலைமை உறுதியாக நம்பியிருந்த வேளையில், எதிர்பாராத திருப்பமாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக அரசு புதிய ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. பதவியேற்றதுமே ‘சிங்கப்பெண் திட்டம்’, ‘200 யூனிட் இலவச மின்சாரம்’ போன்ற தேர்தல் கால முக்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தி தவெக அரசு அதிரடி காட்டியது. இருப்பினும், கடந்த 30 நாட்களிலேயே இந்த அரசுக்கு அடுக்கடுக்கான நெருக்கடிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. கோவையில் சிறுமி கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், முழுமையற்ற கடன் தள்ளுபடியால் விவசாயிகளின் போராட்டம், ஆட்சியைத் தக்க வைக்க அதிமுகவை இரண்டாக உடைத்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் அரசு அலுவலகங்களில் ஆய்வு என்ற பெயரில் ‘ரீல்ஸ்’ வெளியிட்டு ஏற்படுத்திய சர்ச்சைகள் எனப் புதிய அரசு பல்வேறு விமர்சனங்களால் தற்போது தத்தளித்து வருகிறது.
இந்தச் சூழலில், தவெக அரசுக்கு மிக முக்கியமான தலைவலியாக மாறியிருப்பது மாநிலம் முழுவதும் நிலவும் கடுமையான மின்வெட்டுப் பிரச்சனை ஆகும். தமிழகத்தின் பல பகுதிகளில் இரவு நேரங்களில் சுமார் 3 முதல் 5 மணி நேரம் வரை நீடிக்கும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி, மின் வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராடி வருகின்றனர். இந்த மின்வெட்டுப் பாதிப்பு முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி மற்றும் அவரது இல்லம் அமைந்துள்ள நீலாங்கரைப் பகுதியையும் விட்டுவைக்கவில்லை. கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய மின்வெட்டுப் பிரச்சனை, 2011 தேர்தலில் அக்கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது போன்ற ஒரு சூழல், தற்போது தவெக அரசின் ஆரம்ப நாட்களிலேயே எதிரொலிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
புதிய அரசு அமைந்து முதல் 6 மாதங்களுக்கு எந்தவித விமர்சனமும் செய்யப் போவதில்லை என்று திமுக தலைமை முதலில் அறிவித்திருந்தாலும், மக்களின் அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள ‘மின்வெட்டு’ என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் தவெக அரசுக்கு எதிரான முதல் போராட்டக் களமாக இந்த மின்வெட்டுப் பிரச்சனையை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தவெக அரசுக்கு எதிராகப் பிரம்மாண்டப் போராட்டங்களை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் திமுக தலைமை வெளியிடும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…
பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…