தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆரம்பத்தில் ஆட்சி அமைக்க தேவையான 10 எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாததால், தவெகவிற்கு அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு ஆதரவளிக்க முன்வந்தது. ஆனால், திடீர் திருப்பமாக காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையிலும் இடம்பிடித்தன. இதனால் அதிமுகவின் ஆதரவு நிராகரிக்கப்பட்ட சூழலில், இபிஎஸ்க்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 32 மூத்த நிர்வாகிகளின் பதவிகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாகப் பறித்தார். பின்னர் இருதரப்பிற்கும் சமாதானம் ஏற்பட்டாலும், பறிக்கப்பட்ட பதவிகள் மீண்டும் வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த மூத்த தலைவர்கள் கட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணித்து அமைதி காத்து வருகின்றனர்.
இந்த அரசியல் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள திமுக தலைமை தற்போது காய் நகர்த்தி வருகிறது. குறிப்பாக, தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலமாக இருக்கும் திமுக, கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியை மட்டுமே நம்பியிருக்கும் பலவீனமான நிலையில் உள்ளது. இதனைச் சரிசெய்ய, அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கும் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரை திமுகவிற்கு இழுக்க தூது அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் திமுகவில் இணையும் பட்சத்தில், வேலுமணிக்கு கோவை மண்டல பொறுப்பாளராகவும், தங்கமணிக்கு நாமக்கல் மண்டல பொறுப்பாளராகவும் பதவி வழங்க தயார் என திமுக ‘மெகா ஆஃபர்’ கொடுத்துள்ளது. இந்தத் தகவலால் அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்தாலும், எடப்பாடி பழனிசாமியோ “யார் போனாலும் போகட்டும்” என்ற அலட்சியப் போக்கையே காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், இந்த விவகாரம் குறித்து யூடியூப்பர் சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தங்கமணியோ அல்லது வேலுமணியோ அதிமுகவை விட்டு எங்கும் செல்லப் போவதில்லை என்றும், இது எடப்பாடி பழனிசாமியின் குடும்ப ஆலோசனை குழு மற்றும் ‘Pramanya’ குழுவினர் பரப்பும் பொய் செய்தி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மூத்த நிர்வாகிகளான இவர்களைக் கட்சியிலிருந்து விரட்டிவிட்டால், வரும் காலத்தில் திமுகவோடு கூட்டணி வைப்பதற்கு எந்தவித இடைஞ்சலும் இருக்காது என்பதே எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் பிளான் என்றும் சவுக்கு சங்கர் தனது பதிவில் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மறுபுறம், அதிமுகவின் மற்றொரு முன்னாள் அமைச்சரான சி.வி.விஜயபாஸ்கர் திமுகவில் இணையத் தயார் என அக்கட்சியின் தலைமைக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால், புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் செல்லபாண்டி ஆகியோர் விஜயபாஸ்கர் சேர்க்கைக்கு ரெட் சிக்னல் காட்டியுள்ளனர். விஜயபாஸ்கரை கட்சியில் இணைத்தால் தனது ஆதரவாளர்களோடு திமுகவிலிருந்து விலகுவேன் என செல்லபாண்டி தலைமைக்கே எச்சரிக்கை விடுத்துள்ளதால், விஜயபாஸ்கர் திமுகவில் இணையும் சூழல் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் இந்த அதிரடி திருப்பங்கள் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஹைதராபாத் ஃபதேநகர் ரயில் நிலையம் அருகே எல்பிஎஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரவு பகலாகக் கஞ்சா விற்பனை நடைபெற்று…
அக்டோபர் 24 அன்று எடுலாபாத்தில் அமைந்துள்ள 'லிவின்' பண்ணை வீட்டிற்கு கிருஷ்ணா கவுண்டின்யா என்ற இளைஞர் சென்றுள்ளார். தனது நெருங்கிய…
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம், கஞ்ச்பசோடா நகரின் காயத்ரி நகர் பகுதியில் 11,000 வோல்ட் உயர் மின்னழுத்த மின்கம்பி…
இந்தச் சம்பவம் மனிதநேயத்தை உலுக்கும் வகையில் மிகுந்த வேதனையளிக்கிறது. கார் நிறுத்துவது போன்ற மிகச் சிறிய வீடமைப்புப் பிரச்சனைக்காகத் துப்பாக்கியை…
சத்தீஸ்கர் மாநிலத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கிய கணவன், அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்து…
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலம் கிராமத்தில், 3-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் முத்துவேலன் மர்மமான…